2008 நவம்பர் 26… ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய அந்த மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அந்த கோரமான இரவில், காமா மருத்துவமனையில் (Cama Hospital) அரங்கேறிய நெஞ்சை பதறவைக்கும் உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘பாரத் பாக்ய வித்தாதா’ (Bharat Bhhagya Viddhaata) திரைப்படம், தற்போது OTT உலகத்தை அதிரவைக்கத் தயாராகிவிட்டது! இது வரும் ஆகஸ்ட் 14 முதல் இந்தி ZEE5 தளத்தில் இப்படம் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.
இதுவரை நாம் பார்த்த 26/11 கதைகளில் ராணுவ வீரர்களின் வீரத்தையும், துப்பாக்கிச் சண்டைகளையும் மட்டுமே பார்த்திருப்போம். ஆனால், இந்த படம் முற்றிலும் மாறுபட்டது! கையில் எந்த ஆயுதமும் இல்லாமல், வெள்ளை உடையும், வெறும் ஊசி மருந்துகளையும் மட்டுமே கொண்டு, கர்ப்பிணிப் பெண்களையும் நோயாளிகளையும் காப்பாற்ற மரண பயத்தை எதிர்த்துப் போராடிய சாதாரண செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சொல்லப்படாத கதையே இந்த ‘பாரத் பாக்ய வித்தாதா’.
உண்மையான நர்ஸ் அஞ்சலி குல்தேவின் அசாதாரண வீரத்தால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட ‘கீதா மாதவ்’ என்ற செவிலியர் கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். பயங்கரவாதிகள் மருத்துவமனைக்குள் நுழைந்த அந்த இக்கட்டான சூழலில், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் முதல்நிலை அரணாக நின்று நோயாளிகளைக் காப்பாற்றிய வார்டு உதவியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் காவலர்களின் நிஜமான தியாகத்தை இயக்குநர் மனோஜ் தபாடியா மிக விறுவிறுப்பாகத் திரையில் கொண்டு வந்துள்ளார்.

இப்படம் குறித்துப் பேசிய கங்கனா ரணாவத்,
“நெருக்கடியான தருணங்களில் அசாதாரண சவால்களை எதிர்கொண்ட சாதாரண குடிமக்களின் துணிச்சலான கதைகளுக்கு உயிர் கொடுப்பது ஒரு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் எனக்குக் கிடைத்த பெருமை” என்று உணர்ச்சிபொங்கக் குறிப்பிட்டுள்ளார்.
பென் ஸ்டுடியோஸ் (Pen Studios) மற்றும் மணிகர்ணிகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கிரியா ஓக், ஸ்மிதா தாம்பே, சுகிதா தாட்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம், தேசபக்தி மற்றும் மனிதநேயத்தின் உன்னதத்தை உணர்த்தும் ஒரு மாஸ் படைப்பாகும்.
சுதந்திர தின வார இறுதி விடுமுறையைக் கொண்டாட, தியேட்டர்களில் வெளியாகிப் பரவலான பாராட்டுக்களைப் பெற்ற இந்த எமோஷனல் சர்வைவல் த்ரில்லர் திரைப்படத்தை, வரும் ஆகஸ்ட் 14 முதல் ZEE5 தளத்தில் தவறாமல் கண்டு மகிழுங்கள்!