‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ‘தேடியே போறேன்…’ பாடல் ஹிப் ஹாப் ஆதி – டி.இமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது!
விஜய் ஆண்டனியின் படங்களில் எப்போதும் அழகான மற்றும் மறக்க முடியாத பாடல்கள் இருக்கும். ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் அதன் தலைப்பைப் போலவே மனதைக் கவரும் மெல்லிசை மற்றும் பெப்பி பாடல்கள் என சுவாரஸ்யமான கலவையைக் கொண்டுள்ளது. கடந்த வாரம் வெளியான படத்தின் முதல் சிங்கிள் ‘தீரா மழை…’ நல்ல வரவேற்பைப் பெற்றதோடு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
இசையமைப்பாளர் ஹரி டஃபுசியாவின் மற்றொரு மெல்லிசை பாடலான ‘தேடியே போறேன் …’ என்ற இரண்டாவது பாடல் இன்று பிரபல இசை இயக்குநர்களான ஹிப் ஹாப் ஆதி மற்றும் டி. இமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது. ‘தீரா மழை…’ பாடலுக்கு பாராட்டு கிடைத்தது போலவே, இந்த ‘தேடியே போறேன்’ பாடலுக்கும் இசை ஆர்வலர்கள் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பாடலுக்கு ஹரி டஃபுசியா இசையமைத்திருக்க, ஜோத்ஸ்னா ராதாகிருஷ்ணன் பாடியிருக்க, முத்தமிழ் வரிகள் எழுதியுள்ளார். ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை விஜய் மில்டன் எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, டி லலிதா, பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் தயாரித்துள்ளனர்.
படத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், மேகா ஆகாஷ், தாலி தனஞ்செயா, முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணா, ப்ருத்வி அம்பர், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் மற்ற இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, அச்சு ராஜாமணி, ராய் மற்றும் வாகு மசான் ஆகியோர். படத்தொகுப்பை பிரவீன் கே.எல். கையாண்டுள்ளார்.
ரிலீஸூக்கு தயாராகி வரும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.