ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீயவர் குலை நடுங்க’.இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு பத்திரிக்கை, ஊடக மற்றும் பண்பலை நண்பர்களை சந்தித்து, படம் குறித்தான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில்,
தயாரிப்பாளர் ஜி அருள்குமார் பேசியதாவது..,
மிக மகிழ்ச்சியாக இருக்கிறது இறைவனை வேண்டிக்கொண்டிருந்தேன், இந்த விழா எப்படி நடக்கும் என நினைத்தேன், எல்லாம் ஒன்றாக இணைந்து இன்று விழா நடப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் எனக்கு ஒப்புதல் தந்து உழைத்த அனைவருக்கும் நன்றி. நான் பூ வித்து வளர்ந்தவன், நான் அர்ஜுன் சாரின் ஜெண்டில்மேன் படம் பார்த்துள்ளேன். அவரின் ரசிகன் இன்று அவரை வைத்துப் படமெடுத்துள்ளேன் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. எனக்குத் தேதி தந்து படத்தில் நடித்த ஐஸ்வர்யா மேடம், அபிராமி மற்ற நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் உழைத்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. அண்ணன் லோகு எனக்கு நிறைய உதவிகள் செய்தார். படத்தை வெளியிட உதவிய தேவராஜ் அண்ணாவுக்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி.
நடிகை அபிராமி பேசியதாவது..,
இயக்குநர் தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றி. எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. ஐஸ்வர்யா எப்போதும் மிக இனிமையானவர். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. அர்ஜூன் சாரை எப்போது பார்த்தாலும் ஸ்டைலாக இருக்கிறார். அவர் படத்தில் இருப்பது மகிழ்ச்சி. நான் ஒரு அம்மாவாக நடித்துள்ளேன். குழந்தைகள் வளர்ப்பு பற்றி விழிப்புணர்வை இப்படம் தரும் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நடிகை பிரியதர்ஷிணி பேசியதாவது..,
தீயவர்கள் குலை நடுங்க இந்தப்படத்திற்காக நான் நீண்ட காலம் காத்திருந்தேன், தயாரிப்பாளர் பேசியது மிக உணர்வுப்பூர்வமாக இருந்தது. நான் ஒரு அம்மாவாக நடித்துள்ளேன் மிக நல்ல ரோல். படத்தில் நடித்தது மிக நல்ல அனுபவமாக இருந்தது. அர்ஜூன் சார் எல்லோருக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். ஐஸ்வர்யா மேடம் நேச்சுரல் ஆக்டர் அவர்களுடன் நடித்தது மகிழ்ச்சி. சமூகத்திற்கு முக்கியமான கருத்தைச் சொல்லும் படம். அனைவரும் இப்படம் பிடிக்கும் நன்றி.
எழுத்தாளர் அஜயன் பாலா பேசியதாவது..,
தமிழில் வரவர எல்லாம் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கும் போது, தமிழ் தலைப்பு வைத்துள்ள இந்த குழுவிற்கு நன்றி. தயாரிப்பாளரைப் பார்க்க மிக மகிழ்ச்சியாக உள்ளது. இம்மாதிரி தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் வர வேண்டும். அர்ஜூன் சாரை திரையில் பார்க்கப் பொறாமையாக உள்ளது. உடலை அவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் மிக நல்ல நடிகை. இசையமைப்பாளர் மிக அற்புதமான பாடல்களைத் தந்துள்ளார். இந்தப்படம் வெற்றி பெற எல்லா அம்சங்களும் படத்தில் உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது..,
மீடியா நண்பர்களுக்கு என் முதல் நன்றி. எங்களை வாழ்த்த வந்த அனைத்து பெரியவர்களுக்கும் நன்றி. இப்படம் ஒரு உண்மையான சம்பவம், இயக்குநர் சொன்ன போது எனக்கு உடல் நடுங்கி விட்டது. உண்மையான கதையைச் சொல்லும் போது மக்கள் நெருக்கமாக உணர்வார்கள். அவர்களுக்குப் பெரிய விழிப்புணர்வை அது தரும். கமர்ஷியல் சினிமா உலகில் இப்படி உண்மைக் கதையை சொல்ல முயற்சித்த தினேஷுக்கு நன்றி. அர்ஜூன் சார் ரியல் லைஃபில் உண்மையாகவே ஜெண்டில்மேன். அவர் மேஜிக்கை நேரில் பார்த்தது நல்ல அனுபவம். நான் நன்றாக ஃபைட் செய்ய அவர் தான் காரணம். அவர் தான் இந்தப்படத்தில் ஹீரோ. உங்கள் எல்லோருக்கும் படம் பிடிக்கும். இப்படம் திரைக்கு வரும் போது, அனைவரும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் பேசியதாவது..,
என் 15 வருட ஏக்கம் தான் இந்தப்படம். என்னவாக வந்தோம், என்னவாக இருக்கிறோம் என்னவாக போகிறோம் என்பது முக்கியம், என என்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்த அனைவருக்கும் நன்றி. என் அப்பா அம்மாவிற்கு நன்றி. என் அப்பா தான் சினிமா ஆசையை என்னுள் தூண்டியவர். தயாரிப்பாளர் அருள்குமார் அவருக்கு ஊரில் அவ்வளவு மரியாதை, அவர் ரெண்டு படம் சரியாகப் போகவில்லை. ஆனால் அவர் உனக்கு ஒரு படம் தருகிறேன் என்றார். எனக்கு அவர் மேல் இருந்த நம்பிக்கையை விட அவர் என் மேல் வைத்த நம்பிக்கை அதிகம். என்னிடம் எந்த கேள்வியும் கேட்க மாட்டார். அவர் நம்பிக்கைக்கு நன்றி. டெக்னீஷியன்ஸ் எல்லோரும் எனக்கு முழு ஒத்துழைப்பு தந்தார்கள். இப்படம் பார்க்கும் போது இசையமைப்பாளரின் திறமை உங்களுக்குப் புரியும். எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் முழு உழைப்பைத் தந்தார். எழுத்தாளர் நவனீத்திற்கு நன்றி. அர்ஜூன் சார் ஷீட்டிங்கில் நிறைய கரக்சன் சொல்வார், அப்போது நிறைய விவாதிப்போம். அதெல்லாம் படம் முடிந்து பார்க்கும் போது தான் அவரின் எக்ஸ்பீரியன்ஸ் எனக்குப் புரிந்தது. அவ்வளவு ஆதரவாக இருந்தார். ஐஸ்வர்யா மேடம் மிகக் கடுமையாக உழைத்துள்ளார். அர்ஜூன் சாருக்கு சமமான பாத்திரம். மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தில் நிறைய நடிகர்கள் எல்லோரும் கதைக்கு முக்கியத்துவமாக இருப்பார்கள். இந்தப்படத்தில் அனிகா குழந்தை நட்சத்திரம் முக்கியமான கேரக்டர் அதை அவ்வளவு தத்ரூபமாக சூப்பராக நடித்துள்ளார். லோகு சார் இப்படத்தில் அருமையாக நடித்துள்ளார். இங்கு வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் அர்ஜூன் பேசியதாவது..,
எனக்கு இது மிக முக்கியமான படம், எனக்கு எல்லா படமுமே முதல் படம் போலத்தான். தயாரிப்பாளர் அருள்குமார் பூ வித்தாகச் சொன்னார்கள், ஆனால் அவர் சினிமா மீது வைத்திருக்கும் அன்பு தான் அவரை தயாரிப்பாளர் ஆக்கியுள்ளது. எல்லோரையும் மதிக்கும் அவரது பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மனதிற்காகவே இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும். நான் நிறைய புதிய இயக்குநர்களுடன் பணிபுரிந்துள்ளேன், இயக்குநர் தினேஷ், என்னுடன் நிறைய விவாதித்தாக சொன்னார் ஆனால் எல்லாமே படத்திற்காகத் தான், படத்தை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார். இப்படத்தில் ஹீரோ அவர் தான், இவர் தான் என்றார்கள், ஆமாம் இப்படத்தில் மூன்று ஹீரோ, பிரவீன் ஒரு ஹீரோ, ஐஸ்வர்யா ராஜேஷ் இன்னொரு ஹீரோ. ராஜேஷ் அவரது தந்தையின் பெயர், அவர் சின்ன வயதில் தவறிவிட்டார். அவரும் நடிகர் தான், அவருடன் நான் சில படங்களில் நடித்துள்ளேன் அவர் எனக்கு சிறந்த நண்பர். ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச்சிறந்த நடிகை, அவர் இன்னும் வளர வாழ்த்துக்கள். தங்கதுரையுடன் ஷீட்டிங்கில் அதிகம் சுற்றிக்கொண்டிருப்பேன் நல்ல மனிதர். எல்லோருடைய ஆசீர்வாதமும் அன்பும் இப்படத்திற்குக் கிடைக்க வேண்டும். நன்றி.
சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு, ஒரு அதிரடி ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, லோகு. Npks, ராம் குமார், தங்கதுரை, பேபி அனிகா, பிராங்க்ஸ்டர் ராகுல், பிரியதர்ஷினி, சையத், G.K. ரெட்டி, P.L. தேனப்பன், O.A.K. சுந்தர், வேலா ராமமூர்த்தி, பத்மன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில், நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.