‘தீயவர் குலை நடுங்க’ –  விமர்சனம்!

அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், அபிராமி வெங்கடாச்சலம்,  பிரவீண் ராஜா, சிவாஜி ராம்குமார், தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஜி கே ரெட்டி, பி .எல். தேனப்பன்,  வேல.ராமமூர்த்தி, ஓ. ஏ .கே. சுந்தர் மற்றும் பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், ‘தீயவர் குலை நடுங்க’. எழுதி இயக்கியிருக்கிறார், அறிமுக இயக்குநர் தினேஷ் லட்சுமணன்.

பிரபல எழுத்தாளர் (லோகு) ஜெபநேசன், நள்ளிரவில் தூக்கம் வராத காரணத்தினால் காரில் சிறிது தூரம் ஓட்டிச் செல்கிறார். அப்போது மர்ம மனிதன் ஒருவனால் திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தப்பட்டு, அவர் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.  இந்த கொலை வழக்கை விசாரணை செய்ய காவல்துறை அதிகாரி (அர்ஜுன்) மகுடபதி நியமிக்கப்படுகிறார். எழுத்தாளர் ஜெபநேசனின் கொலைக்கான காரணம் என்ன? கொலையாளி யார்? என்பதே ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு சிறுமியின் உண்மை சம்பவத்தை, கறபனை கலந்து இயக்கியிருக்கிறார், இயக்குநர் தினேஷ் லட்சுமணன். எளிதில் யூகிக்கக்கூடிய திரைக்கதையால் ரசிக்க முடியவில்லை. அதிலும் முதல் காட்சியிலேயே காட்டப்படும் அந்த மர்ம உருவத்தை ரசிகர்கள் மிக எளிதாக கண்டு கொள்வதால் சுவாரசியமும் இல்லாமல் போகிறது. க்ளைமாக்ஸில் உள்ள அந்த டிவிஸ்ட் மட்டும் இல்லை என்றால். மோசமான அனுபவத்தை கொடுக்கும் படமாக மைந்திருக்கும்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அர்ஜுன், ஏனோ.. தானோ… என நடித்திருபதைப் போல் இருக்கிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் வழக்கம் போல் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார்.

அபிராமி வெங்கடாசலம் ,பிரவீண் ராஜா, சிவாஜி ராம்குமார், தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஜி கே ரெட்டி, பி .எல். தேனப்பன்,  வேல.ராமமூர்த்தி, ஓ. ஏ .கே. சுந்தர் போன்றோரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பயண்பட்டிருக்கிறார்கள்.

சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவும், பரத் ஆசிவகன் இசையமைப்பும் பரவாயில்லை! இதுவும் ஒரு வழக்கமான, பாலியல் குற்றம் தொடர்பான திரைப்படம் என்பதால் பெரிதாக ஈர்க்கவில்லை.