‘தோழர் சேகுவேரா’ – விமர்சனம்!

நாயகன் அலெக்ஸ், 12ம் வகுப்பில் அதிக மதிப்பென்களை பெற்று தேர்ச்சி ஆகிறார். அதற்கு மேல் படிப்பதற்கு வசதியில்லாமல் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். பொறியியல் கல்லூரி பேராசிரியராக பணியாற்றும் சத்யராஜ், நன்றாக படிக்கு அலெக்ஸை கல்லூரியில் சேர்த்து சில உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குகிறார். அலெக்ஸ், கல்லூரியில் சாதிய வன்முறைக்கு ஆளாகிறார்.

சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை, கொத்தடிமைகளாக உருவாக்க அவர்கள் எந்த விதத்திலும் முன்னேற விடாமல் செய்கிறார், அரசியல் அதிகாரம் படத்த கலிய பெருமாள். இதற்காக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய எதையும் கிடைக்கவிடாமல் செய்து, அவர்களை வறுமையில் தள்ளுகிறார். இதை எதிர்த்து வெகுண்டு எழுகிறார், நாயகன் அலெக்ஸ். இதன் பிறகு நடக்கும் சம்பவங்களே தோழர் சேகுவேரா படத்தின் கதை.

சாதிய ஏளனங்கலாலும்,  வன்முறைகளாலும் பாதிக்கப்படும் மாணவனின் வலிகளை அப்படியே பிரதிபலித்திருக்கிறார், நெப்போலியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அலெக்ஸ். கல்லூரியில் உதவித்தொகை வாங்குவதற்கு அவர் அலையும்போது பரிதாபம் ஏற்படுகிறது.

‘சேகுவேரா’ என்ற கல்லூரி பேராசியர் கதாபாத்திரத்தில் சில காட்சிகளில் நடித்திருக்கிறார், சத்யராஜ். அவருடைய கதாபாத்திரம் பாதியிலேயே வலுக்கட்டயமாக முடிக்கப்பட்டிருக்கிறது. அவர் பேசும் வசனங்கள் சில இடங்களில் கைதட்டல் பெறுகிறது. படிப்பால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்பதை வலியுறுத்தியிருப்பது பாராட்டத்தக்கது.

கலியபெருமாள் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் கவனம் பெறுகிறார்.

டாக்டராக நடித்திருக்கும் மொட்டை ராஜேந்திரன் சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.

கதையை யோசித்த இயக்குநர் ஏ.டி.அலெக்ஸ், அதற்கான காட்சிகளை வடிவமைப்பதில் திணறியிருக்கிறார்.

சாம் அலன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசையமைத்திருக்கிறார் பி.எஸ்.அஸ்வின்.

‘தோழர் சேகுவேரா’ – முடிவுறா போராட்டம்!