விஜய்சேதுபயின்  “துக்ளக் தர்பார்”

தயாரிப்பாளர்  லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்  மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் மற்றுமொரு பிரம்மாண்டமான படம் துக்ளக் தர்பார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.  அதிதிராவ் ஹெய்தாரி  நாயகியாக நடிக்கிறார். இயக்குநரும் நடிகருமான ரா.பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே விஜய்சேதுபதி பார்த்திபன் கூட்டணி  நானும் ரவுடி தான் படத்தில் மக்களை மிகவும் கவர்ந்த கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியொரு மாஸான கூட்டணியை இணைத்து கதை திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்க இருப்பவர் புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன்.

 

மேலும் இப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இரண்டு இயக்குநர்கள் இணைந்துள்ளனர். ஒருவர், நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இவர் இப்படத்தின் வசனங்களை எழுதி இருக்கிறார். மற்றொருவர்  96 படம் மூலமாக இயக்குநராக பெரியளவில் கவனம் ஈர்த்த கேமராக்காதலன் பிரேம்குமார். இவர் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது கூடுதல் எனர்ஜி. இந்தக் கவிநய கூட்டணியில் இளைஞர்களின் ஆதர்ச இசைஞர் கோவிந்த் வசந்தா இசை அமைப்பாளராக இணைந்திருக்கிறார். ஆர்ட் டைரக்டர் குமார் கங்கப்பன். எடிட்டராக கோவிந்த் ராஜ் பணியாற்ற சண்டைப்பயிற்சியை திலீப் சுப்புராயன் கவனிக்கிறார்.

 

திரைத்துறையில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திய கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு இன்று சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக துவங்கியது. பூஜையில்,  விஜய்சேதுபதி, அதிதிராவ் ஹெய்தாரி, பார்த்திபன், காயத்ரி, சமுத்திரக்கனி, பகவதி பெருமாள், கருணாகரன், ராஜ்குமார், தயாரிப்பாளர்கள்  வயகாம் அனுப் விஜய்சேதுபதி புரொடக்சன் ராஜேஷ், சினிமாவாலா  சதிஷ்  மற்றும் இயக்குநர்கள் பிரேம்குமார், பாலாஜி தரணிதரன், தியாகராஜ குமாரராஜா, அஜய் ஞானமுத்து, பிரபாகரன், மருதுபாண்டி, ஆண்ட்ரு ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக ஆந்திரமாநிலம் சித்தூர் டிஸ்டிக் கலெக்டர் என்.பாரத்குப்தா கலந்து கொண்டார்.

 

இப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் சீயான் விக்ரம் நடிப்பில் ஒரு புதிய படத்தையும் மேலும் பல பெரிய படங்களையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.