இயக்குநர் ஹெச்.வினோத்தின் உதவியாளர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘துரிதம்’.. இதில் ‘சண்டியர்’ படத்தில் நடித்த ஜெகன்கதாநாயகனாகவும் , ஈடன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், மற்றும் பாலசரவணன், மறைந்த நடிகர் ‘பூ’ ராமு ஆகியோர் நடிக்க வில்லனாக ராமச்சந்திரன் (ராம்ஸ்) நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் உளுந்தூர்பேட்டையை மையமாக வைத்து சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் பல நாட்கள் படமாக்கப்பட்ட்டுள்ளது.
இந்தப் படத்திற்காக அறிமுக இசையமைப்பாளர் அமுதன் ஆத்ம சாந்தி இசையமைப்பில் ஆண்ட்ரியா பாடிய “நில்லாமலே..” என்கிற பர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கு நரேஷ் என்பவர் பின்னணி இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை பார்த்த இயக்குநர் ஹெச்.வினோத், பாராட்டியதுடன் படத்தின் ரிலீஸ் தொடர்பாக சில ஆலோசனைகளையும் படக் குழுவினருக்கு வழங்கினாராம்.
துரிதம் திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்குளில் வெளியிட திட்டமிடப்பட்டு அது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.