தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் விழா கடந்த 8.11.2018 முதல் 13.11.2018 வரை நடைபெற்றது.
இவ்விழாவில் சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக சுமார் 3200 க்கு மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டும் 70 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைத்தும் 10 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்கானிக்கப்பட்டது.
சூரசம்ஹாரம் விழாவில் மக்களுக்கு எவ்வித அசம்பாவிதமின்றி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இவ்விழாவில் சிறப்பாக பாதுகாப்பு அளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.முரளி ராம்பா இ.கா.ப அவர்கள் தலைமையிலான போலீசாருக்கு கோவில் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.