மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் உள்ள கப்பலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தென் மாவட்ட அளவில் விதைத் திருவிழா நடைபெற்றது. சிறுதானிய வகைகளும் பாரம்பரிய விவசாய உற்பத்தி பொருட்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இதில் பாரம்பரிய விதைகள் சேகரிப்பு, மரக்கன்றுகள் வழங்குதல், நாட்டுப்புற விளையாட்டுகள், நாட்டுப்புறக் கலைகள் என பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன. இந்நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக சாப்பிட்டியா ஆகாதமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் 100-க்கும் மேற்பட்டவர்களை ஒருங்கிணைத்து ஒரு வாரம் பயிற்சி மேற்கொண்டு ஒயிலாட்டத்தை அரங்கேற்றினர். சாக்யா அகாதமியின் தலைமை பயிற்சியாளர் கலைமணி. து. தங்கபாண்டி, ஆலம்பட்டி பாண்டி மற்றும் முத்துக்குமார் ஆகியோர் மாணவ மாணவியர்களுக்கு ஒயிலாட்டக்கலையை திறம்பட கற்றுக் கொடுத்தனர்.
ஒயிலாட்ட கலையை நிகழ்த்திய மாணவ மாணவியர்களுக்கும் கலந்து கொண்ட இயற்கை ஆர்வலர்களுக்கும் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டன. சாக்யா அகாதமியின் இயக்குனர் முனைவர் செந்திலிங்கம், இயற்கை விஞ்ஞானி அன்னவயல் காளிமுத்து, மதுரை மாவட்ட தலைவர் பொன்னுதுரை, கிளப் தலைவர் நவநீதகிருஷ்ணன், துணைத் தலைவர் ராமர், உறுப்பினர்கள் டாக்டர் திருவேங்கட மூர்த்தி, சேவை மணிஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர். கல்லூரியின் முதல்வர் துணை முதல்வர் மற்றும் பயிற்சி மேற்பார்வையாளர்கள் பேரா. மீனா மற்றும் ஜெகநாதன் ஆகியோர் மற்றும் சாக்யா அறக்கட்டளையின் தன்னார்வலர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.