லைக்கா புரடக்ஷன் – மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொன்னியின் செல்வன்’. மணிரத்னம் இயக்கத்தில் சுமார் 800 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிவருகிறது.
இந்தப்படத்தில் சரத்குமார், விக்ரம், பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், நிழல்கள் ரவி, மோகன் ராமன் ஆகியோருடன் ‘ஜெகமே தந்திரம்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர்.
த்ரிஷா , முதல் கட்ட படப்பிடிப்பில் சில நாட்கள் கலந்து கொண்டு நடித்தார். தற்போது ஹைதராபாத்தில் நடந்துவரும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் மீண்டும் த்ரிஷா கலந்து கொண்டுள்ளார்.
இந்தப்படத்தில் சோழநாட்டின் இளவரசி குந்தவையாக த்ரிஷா நடித்து வருகிறார்.