காட்டேரி பிரீ ரிலீஸ் ஈவென்ட்! ‘காட்டேரி’ விருந்துடன் களைகட்டியது!

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர், தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா, தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தனிக்கவனம் செலுத்துபவர். இவருடைய அடுத்த தயாரிப்பான ‘காட்டேரி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் ‘ யாமிருக்க பயமே’ எனும் வெற்றிப்படத்தினை இயக்கிய இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கிறது.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு நடந்த காட்டேரி பிரீ ரிலீஸ் ஈவென்ட் நிகழ்ச்சி களைகட்டியது. நிகழ்ச்சிக்கு வருபவர்களை வரவேற்க காட்டேரி பேய்கள் தட்டு நிறைய சாக்லேட்டுடன் வரவேற்றன. காட்டேரி படத்தின் பிரத்யேக டிரைலர்கள் திரையிடப்பட்டதுடன், முதல் 10 நிமிட காட்சிகளும் திரையிடப்பட்டது. இது முழு படத்தையும் உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவலை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது. குறிப்பிடத்தக்கது.

திகிலூட்ட இயக்குனர் டீகேவும் சிரிக்க வைக்க நடிகர்கள் வைபவ், கருணாகரன், நடிகைகள் சோனம் பஜ்வா, ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், மனாலீ,  பொன்னம்பலம், ரவி மரியா, மைம் கோபி, ஜான் விஜய், லொள்ளு சபா மனோகர், சேத்தன் உள்ளிட்ட பலர் ஒன்று சேர்ந்துள்ளனர்.

விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு எஸ். என். பிரசாத் இசையமைத்திருக்கிறார்.  ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

காட்டேரி படம் குறித்து இயக்குனர் டீகேவிடம் கேட்டபோது, திகிலோடு வாங்க, சிரிச்சுக்கிட்டே போங்க என்றார்.

நிகழ்ச்சியின் முடிவில் வந்திருந்த அனைத்து விருந்தினர்களுக்கும் விதவிதமான அசைவ உணவுகள் தடபுடலான உபசரிப்புடன் நடந்தது..