‘வருணன்’ (விமர்சனம்.) பயன் தராத கோடை மழை!

ராதாரவி ,சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரியல்லா, ஹரிப்பிரியா, சங்கர் நாக் விஜயன், மகேஸ்வரி உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் படம், வருணன். இப்படத்தினை, ‘யாக்கை பிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில், கார்த்திக் ஸ்ரீதரன் தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர், ஜெயவேல் முருகன் இயக்கியிருக்கிறார். கோடிகளில் கொள்ளை லாபம் நடந்து வரும் வியாபாரங்களில், தண்ணீர் சப்ளையும், ஒன்று. ஆந்த வியாபாரத்தையும் அதன் பின்னணியும் தான் இந்த வருணன் பேசியிருக்கிறதா? பார்க்கலாம்.

தமிழ் சினிமா படைப்பாளிகளால், ரௌடிகள் சாம்ராஜ்யமாக முத்திரைக்குத்தப்பட்ட, சென்னை, ராயபுரம் பகுதியில் சரன்ராஜ், ராதாரவி இருவரும்  தண்ணீர் கேன் விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் தொழில் ரீதியான போட்டி இருந்து வருகிறது. இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் இருக்கின்றனர். ஆனால் இவர்களிடம் வேலை செய்து வருகிறவர்கள் அடிக்கடி மோதிக் கொள்கின்றனர். இது பெரும் பகையாக மாறுகிறது. இதனால், அவர்களது வாழ்க்கையும், திசையும் மாறுகிறது. என்பதை சொல்வதே வருணன் படம்.

தண்ணீர் கேன் வியாபாரிகளாக நடித்திருக்கும், ராதாரவி மற்றும் சரண்ராஜ் இருவரும் , அனுபவமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனம் நிறைகிறார்கள்.

முதன் முறையாக நாயகனாக நடித்திருக்கிறார், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ். கதாபாத்திரத்திற்கேற்றபடி கச்சிதமாக நடித்திருக்கிறார். இவருடன் நாயகியாக நடித்திருக்கும் கேப்ரில்லாவும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப கச்சிதமாக நடித்திருக்கிறார்.

மற்றொரு நாயகன், நாயகியாக நடித்திருக்கும் பிரியதர்ஷன் மற்றும் ஹரிபிரியா ஜோடியும் குறை சொல்ல முடியாத நடிப்பினை கொடுத்துள்ளனர்.

வில்லனாக நடித்திருக்கும் சங்கர்நாக் விஜயன் கவனம் ஈர்க்கும்படி வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜீவா ரவி, மகேஸ்வரி, அர்ஜுனா கீர்த்திவாசன், ஹைட் கார்த்தி, கெளசிக், கிரண்மயி என அனைவரும் திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், படத்தின் பலம். கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை படமாக்கிய விதம் வியக்க வைக்கிறது.

இசையமைப்பாளர் போபோ சசியின் இசை ஆவரேஜ்!

என்.ரமணா கோபிநாத்தின் வசனம் சிறப்பாக இருக்கிறது.

இதுவரை சினிமாவில் யாரும் தொட்டிராத கதையை, எழுதி, இயக்கியிருக்கும் இயக்குநர் ஜெயவேல் முருகன், அது குறித்த எந்தவிதமான விஷயங்களும் இல்லாமலிருப்பது படத்தின் குறை. தண்ணீர் கேன் போடும் இளைஞனின் வழக்கமான காதல், திருமணம், அதைச்சார்ந்த அடிதடி வெட்டுக்குத்து தான், வருணன்.

‘வருணன்’ –  பயன் தராத கோடை மழை!