இயக்குநர் ஷங்கரின் S பிக்ச்சர்ஸ் வழங்கும் ‘அநீதி’.

தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான அர்பன் பாய்ஸ் நிறுவனத்தின் ‘அநீதி’ திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. தெலுங்கு பதிப்பிற்கு ‘பிளட் அண்டு சாக்லேட்’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

‘அநீதி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ‘அநீதி’ திரைப்படத்தின் வசனகர்த்தா ’இயக்குநர்’ எஸ்.கே.ஜீவா பேசியதாவது…

“‘புதுமைப்பித்தன்’ மற்றும் ‘லவ்லி’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள நான் ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் எழுத்தாளராக பணியாற்றினேன். இடைப்பட்ட காலத்தில் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டிருந்தேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய ‘ஜெயில்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தை இயக்குநர் வசந்த பாலன் எனக்கு வழங்கினார். ஒரு நாள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர், ‘அநீதி’ திரைப்படத்திற்கு வசனம் எழுதுமாறு கேட்டுக் கொண்டார். எனக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது, ஏனென்றால் வசந்த பாலன் அவர்களே மிகச் சிறந்த எழுத்தாளர். அது மட்டும் இல்லாது தமிழ் இலக்கிய உலகின் முன்னணி எழுத்தாளர்கள் அனைவருடனும் அவர் நெருங்கிய தொடர்பில் உள்ளார். அப்படி இருக்கும்போது என்னை நம்பி படத்தின் வசனப் பொறுப்பை அவர் ஒப்படைத்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இப்படத்தின் தயாரிப்பாளர்கள் குழுவினருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மனமுவந்து செய்து கொடுத்தார்கள். நடிகர்கள் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவரும் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார்கள். நடிகவேள் எம் ஆர் ராதா மற்றும் கலைஞர் ஆகியோருக்கு பிறகு தனித்துவமான குரலை அர்ஜுன் தாஸ் கொண்டிருக்கிறார். இந்த ‘அநீதி’ நீதிக்கானது. அனைவரும் ஆதரவளிக்குமாறு வேண்டுகிறேன், நன்றி.”

நடிகர் பரணி பேசியதாவது…

“இயக்குநர் வசந்த பாலனோடு பணியாற்ற வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் ஆசை இப்படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது. சமூக பொறுப்பு மிகவும் கொண்ட படைப்பாளி அவர். ‘அநீதி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டுமென்று நான் வணங்கும் முருகனிடம் மனமார வேண்டுகிறேன். நன்றி.”

நடிகர் அர்ஜுன் சிதம்பரம் பேசியதாவது…

“‘அநீதி’ திரைப்படத்தில் நடிப்பதற்காக என்னை வசந்த பாலன் அவர்கள் அழைத்த போது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்படத்திற்காக முடியை மிகவும் நீளமாக வளர்த்து வைத்திருந்தேன். பெருந்தன்மையுடன் அதே தோற்றத்தில் என்னை இப்படத்தில் நடிக்க அனுமதித்ததற்காக வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. ‘அநீதி’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள்.”

நடிகை வனிதா விஜயகுமார் பேசியதாவது…

“இத்திரைப்படத்தின் மூலம் ஒரு இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரை உலகில் நான் மீண்டும் பிரவேசிக்கிறேன். இது ஒரு மிகவும் அருமையான திரைப்படம். இதில் அதி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் ஒன்றை எனக்கு அளித்த வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. திரைத்துறையின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருந்தும் வசந்த பாலனிடம் துளி அளவு கர்வம் கூட இல்லை. அத்தனை எளிமையாக அனைவரிடமும் பழகுகிறார். அர்ஜுன் தாசை தமிழ் திரை உலகின் ஷாருக்கான் என்று கூறலாம். மிகைப்படுத்துவதற்காக நான் இதை கூறவில்லை. ‘அநீதி’ படம் திரைக்கு வரும் போது நீங்கள் இதை உணர்வீர்கள். துஷரா  விஜயன் மிகவும் திறமையான நடிகை. இப்படத்தில் பணியாற்றி உள்ள அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்கள். ‘அநீதி’ திரைப்படம் பெரிய வெற்றியை பெறும்.”நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி பேசியதாவது…

“வசந்தபாலன் ஒரு துருவ நட்சத்திரம் போன்றவர். ஆஸ்திரேலியாவில் நான் வசித்த காலத்தில் அவரது படங்களை தொடர்ந்து பார்த்து ரசிப்பேன்.  அவரது இயக்கத்தில் நான் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி. இப்படத்தில் நடித்த பின்னர் அர்ஜுன் தாசின் ரசிகனாக நான் மாறி விட்டேன், சிறு வயதிலேயே மிகுந்த திறமையோடு அவர் திகழ்கிறார். ‘அநீதி’ திரைப்படம் மிகவும் செம்மையாக உருவெடுத்துள்ளது, பத்திரிகையாளர்கள் அனைவரும் இப்படத்திற்கு ஆதரவளித்து மாபெரும் வெற்றி அடைய செய்ய வேண்டும், நன்றி.”

நடிகை துஷாரா விஜயன் பேசியதாவது…

“இயக்குநர் வசந்த பாலன் மிகுந்த அர்ப்பணிப்பு மிக்கவர், அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்ததற்காக அவருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. ஒப்பனை இல்லாமலேயே இப்படத்தில் என்னை மிகவும் அழகாக காட்டிய ஒளிப்பதிவாளருக்கு நன்றி. அர்ஜுன் தாசுடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது, அவர் ஒரு சிறந்த நடிகர். இப்படத்திற்கு ஆதரவளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.”

நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது…

“இயக்குநர் வசந்தபாலன் என்னை சந்திக்க வேண்டும் என்று கூறிய போது வில்லன் பாத்திரத்தில் நடிக்க தான் கூப்பிடுகிறார் என்று எண்ணினேன். ஆனால் அவர் சுமார் 3:30 மணி நேரம் எனக்கு கதையை பொறுமையாக விவரித்ததுடன் மட்டுமில்லாமல் இதில் நாயகனாக நடிக்க வேண்டும் என்று கூறி என்னை மகிழ்ச்சியில் ஆற்றினார். அடுத்த நாளே இந்த படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமானேன். அவருடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம், மீண்டும் ஒருமுறை அவரது படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இப்படத்தில் அனுபவமிக்க பல நடிகர்களுடன் நடித்தது நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. ‘அநீதி’ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.”

நிர்வாகத் தயாரிப்பாளர் பிரபாகர் பேசியதாவது..

“இயக்குநர் வசந்த பாலன் அவர்களுக்கும் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘அநீதி’ திரைப்படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. அர்ஜுன் தாஸ், துஷாரா, வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். வசந்த பாலன் ஒரு தலைசிறந்த இயக்குநர், தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி மிகச்சிறந்த மனிதராகத் திகழ்கிறார். இது அவரை இன்னும் உயரங்களுக்கு இட்டு செல்லும். ‘அநீதி’ திரைப்படத்திற்கு உங்களது முழு ஆதரவை வழங்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.”

இயக்குநர் வசந்த பாலன் பேசியதாவது…

“வல்லான் வகுத்ததே நீதி, எளியோருக்கு இங்கு அநீதி என்ற இந்த காலகட்டத்தில் நீதியை உரக்கச் சொல்ல இந்த ‘அநீதி’ திரைப்படம் வருகிறது. நீதி கிடைக்காதவர்கள் குரலாக இப்படம் ஒலிக்கும். எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை இது பிரதிபலிக்கும். மொத்த உலகமும் சிறு அன்பை எதிர்பார்த்தே சுழல்கிறது. அதை இப்படத்தின் மூலம் சொல்ல முயற்சித்துள்ளோம். நண்பர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இப்படத்தை தயாரித்துள்ளோம். இயக்குநர் ஷங்கர் சார் ‘வெயில்’ படத்தை தயாரித்து எனக்கு வாய்ப்பளித்தார். நான் தயாரிப்பாளராக மாறி உள்ள ‘அநீதி’ படம் குறித்து அவருக்கு தெரிவித்த போது, தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் அதை வழங்குவதற்கு வழி முன் வந்தார். அவருக்கு மிக்க நன்றி. இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் தங்களது மிகச்சிறந்த பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்கி உள்ளார்கள். இவர்களை எல்லாம் ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு மிகுந்த மகிழ்ச்சி. அர்ஜுன் தாஸ் ஷாருக்கான் போன்று வருவார் என்று இங்கு கூறினார்கள். உண்மையிலேயே அவருக்கு அதற்கான திறமை இருக்கிறது. இந்த படத்தை எந்தவித சமரசமும் இல்லாமல் உருவாக்கி இருக்கிறோம், அனைவருக்கும் நன்றி.”