‘வீரவணக்கம்’ –  விமர்சனம்!

‘விசாரத் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்து, அனில் வி.நாகேந்திரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம், வீரவணக்கம். இதில் சமுத்திரக்கனி, பரத், ரித்தேஷ், பிரேம்குமார், ரமேஷ் பிஷராடி, சுரபி லட்சுமி, பி கே மேதினி , ஆதர்ஷ் , சிதாங்கனா, ஆயிஷ்விகா நடித்துள்ளனர். ஒளிப்பதிவு- கவியரசு. எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

தாழ்த்தப்பட்ட, தொழிலாளர் வர்க்கத்தினர் சமூகத்தில் அனைத்து தரப்பிரனருடன் சமமாக வாழ, அவர்களது உரிமையை மீட்டுக்கொடுத்ததில், முக்கிய பங்கு வகுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் தான். அந்த கம்யூனிஸ்ட்டுகள், தமிழகத்தில் எவ்வாறு போராட்டத்தினை முன்னெடுத்தனர் என்றும், அந்தத் தலவர்கள் யார், யார்? என்பதை சொல்வதே வீரவணக்கம்.

உயர் சாதிப்பிரிவினை சேர்ந்த செல்வந்தர் பரத். இவர் ஒரு கம்யூனிஸ்ட். பிற சாதி மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பல்வேறு வகையிலும் உதவிகளை செய்து வருகிறார். அனைத்து தரப்பு மக்களிடமும் வித்தியாசமின்றி பழகி வருகிறார். இந்நிலையில் பக்கத்து ஊரில் நடக்கும் ஒரு சாதி மோதலில் பாதிக்கப்படும் மக்களுக்கு துணை நிற்பதோடு, போராட்டக்களத்தில்  அவர்கள் பிரச்சனையை எப்படி அணுக வேண்டும் என்பதை தெரியப்படுத்த, சுமார் 90 வயதுக்கு மேற்ப்பட்ட கம்யூனிஸ்ட் பி.கே.மேதினியிடம் அழைத்துச்செல்கிறார்.

கம்யூனிஸ்ட் பி.கே.மேதினி, தென்னிந்தியாவில் முதன்முதலாக கம்யூனிஸத்தை தோற்றுவித்த பி.கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றினையும், அவர் போராடிய விதத்தினையும், மக்களை எவ்வாறு ஒன்று திரட்டி அநீதிக்கு எதிராக போரடியவற்றையும் சொல்கிறார்.

1940 களில், ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில், அவர்களின் ஆசியுடன் நிலச்சுவாந்தர்கள் விவசாய தொழிலாளர்களை எப்படி அடிமைகளாக வைத்திருந்தனர். என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார், இயக்குநர் அனில் வி.நாகேந்திரன்.

உண்மையான கம்யூனிஸ்ட் பி.கிருஷ்ண பிள்ளையின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார். பரத், குறுகிய நேரத்தில் இடம்பெறும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். குறிப்பாக,  கிளைமாக்ஸ் காட்சியில்.

ரித்தேஷ், பிரேம்குமார், ரமேஷ் பிஷராடி, சுரபி லட்சுமி, பி கே மேதினி , ஆதர்ஷ் , சிதாங்கனா, ஆயிஷ்விகா நடித்துள்ளனர். ஒளிப்பதிவு- கவியரசு. எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஆகியோரும் சிறப்பாகவே நடித்துள்ளனர்.

கவியரசுவின் ஒளிப்பதிவும், எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஆகியோரது இசையும் நன்றாக இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் அனில் வி.நாகேந்திரன், பி.கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்க்கையை உணர்வுப்பூர்வமாக கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘வீரவணக்கம்’ திரைப்படத்தினை, போராட்டக் குணத்தை முற்றிலும் மறந்த, தமிழக கம்யூனிஸ்ட்டுகள் பார்க்க வேண்டியது அவசியம்!