‘ஹேஷ்டேக் FDFS’ புரொடக்ஷன்ஸ் சார்பில், திரவ் தயாரித்து, நடித்து, எடிட் செய்திருக்கும் படம், வெப்பம் குளிர் மழை. இப்படத்தை, அறிமுக இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து இயக்கியிருக்கிறார். இவர், இயக்குநர் பிரம்மாவின் உதவியாளர். இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் எம்.எஸ்.பாஸ்கர், திரவ், இஸ்மத் பானு, ராமா, மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.
‘வெப்பம் குளிர் மழை’ திரைப்படத்தின் கதையினை, அறிமுக இயக்குநர் பாஸ்கல் வேதமுத்துவின் கிராமத்தில் நடந்த, அவர் வாழ்க்கையில் பார்த்த, சில சம்பவங்களை தொகுத்து கற்பனை கலந்து உருவாக்கியிருக்கிறார்.
இன்றைய புதுமணத் தம்பதிகள் அநேகம் பேர் சந்திக்கும் ஒரு முக்கியமான பிரச்சனையை கையிலெடுத்துள்ளார், இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து. அதாவது, குழந்தை பெற்றெடுக்கும் சூழலினை, அது சார்ந்த பிரச்சனைகளை மிகவும் துணிச்சலான முறையில் திரைக்கதைப் படுத்தியிருக்கிறார். இது பலரது வாழ்க்கையில் சந்தித்த ஒரு பிரச்சனையாகவே இருக்கும் என்றும், அவர் கூறுகிறார்.
இதில், தம்பதிகள் சந்திக்கும் மன, உடல் ரீதியானஉணர்வுகளின் வெளிப்பாடுகள் குறித்தும், செயற்கை முறை கருத்தரித்தல் முறை குறித்தும் கூறப்பட்டுள்ளதாம்.
வெப்பம் குளிர் மழை, படத்தின் தயாரிப்பாளரான திரவ், கதையின் முதன்மை கதாபாத்திரமான ‘பெத்த பெருமாளாக’ நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தின் ஒரு பாடலில் தோன்றி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இஸ்மத் பானு, ‘பாண்டி’ என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், ‘திரி அய்யா’ என்ற நடித்திருக்கிறார்.
இன்று வெப்பம் குளிர் மழை திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் ‘சூப்பர் சிங்கர்’ புகழ் ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாடிய ‘டமக்கு டமக்கா’ பாடல் யூடுயூபில் வெளியாகி ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.
வெப்பம் குளிர் மழை திரைப்படம், திரையரங்குகளில் வரும் மார்ச் 29 ஆம் தேதி வெளியாகிறது.