இயக்குனர் கே .பாலசந்தரின் ஆஸ்தான நடிகை காலமானார்.

தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர், கமலகுமாரி என்ற ஜெயந்தி. அவருக்கு வயது 76. கடந்த சில வருடங்களாக ஆஸ்துமாவால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், பெங்களூரில் உள்ள தனது வீட்டில் இன்று காலமானார்.

நடிகை ஜெயந்தி, மறைந்த மூத்த நடிகர்கள்  எம்ஜிஆர், ஜெமினி கணேசன்,நாகேஷ் உள்பட பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

எம்.ஆர்.விட்டல் இயக்கத்தில் வெளிவந்த மிஸ்.லீலாவதி என்ற கன்னடப்படத்தில் நடிகை ஜெயந்தி ஸ்கர்ட் , டி-ஷர்ட்ஸ் அனிந்து முதன்முதலாக நடித்தார். மேலும் கன்னடப்படங்களில் துனிந்து நீச்சலுடையும் அணிந்து நடித்தார்.  7 முறை கர்நாடக மாநில விருதுகளை வென்றுள்ளார்.

இயக்குனர் கே.பாலசந்தரின் ஆஸ்தான நடிகையாக திகழ்ந்தவர். அவரது இயக்கத்தில் ‘எதிர்நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘பாமா விஜயம்’, ‘வெள்ளி விழா’ உட்பட ஏராளமான தமிழ்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஜெயந்தி.

ஜீனு கூடு கன்னட படத்தில் நடித்தபோது ஏற்பட்ட நட்பால் அந்தப்படத்தின் இயக்குனர்,  பெக்கெட்டி சிவராமை திருமணம் செய்து கொண்டார் . இவருக்கு கிருஷ்ணகுமார் என்ற ஒரு மகன் இருக்கிறார்

நடிகை ஜெயந்தியின் மறைவை அடுத்து திரையுலகினரும், ரசிகர்களும் அவரது தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.