இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரகனி நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘ரைட்டர்’. இந்த திரைப்படத்தின் சிறப்புகாட்சி திரையிடப்பட்டது.
‘ரைட்டர்’ படம் பார்த்தபிறகு அப்படத்தின் இயக்குனர் பிராங்ளினை கட்டிப்பிடித்து பாராட்டுக்களை தெரிவித்த அவர் கூறியதாவது…
‘ ரொம்ப முக்கியமான படத்தை தமிழ் சினிமாவிற்கு தந்திருக்கிறீர்கள். சமுத்திரகனியின் நடிப்பு தனித்துவமாக இருக்கிறது. இந்த வருடத்தின் மாபெரும் வெற்றிப்பட வரிசையில் ரைட்டரும் இருக்கும்.தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட படங்களை தயாரித்துவரும் இரஞ்சித்துக்கு எனது வாழ்த்துக்களும் அன்புகளும் என்றார்.