இயக்குனர் வெற்றி மாறன் தலைமையில் உருவான இந்தத் திரைப்படத்தில், மற்றவர்களுக்கிடையில் விஜய் சேதுபதி, சூரி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள் மற்றும் இத்திரைப்படம் தற்போது தமிழில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது ~
நேஷனல் 28 ஏப்ரல் 2023: ZEE5, இந்தியாவின் மிகப்பெரிய ஹோம் க்ரோன் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் பன்மொழி கதைசொல்லி தளமான ZEE5, சமூக-அரசியல் கதைக்கள டிராமாவான ‘விடுதலை – பகுதி 1’ இன் உலகளவிலான டிஜிட்டல் வெளியீட்டை இன்று அறிவித்தது -. விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் இப்போது டைரக்டர்ஸ் கட் உடன் தமிழில் இப்போது ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது..
விடுதலை திரைப்படம், காவல்துறை நடத்தும் அட்டூழியங்களுக்கு பின்னால் உள்ள நெறிமுறைகளை மனதை நெருடும் வகையில் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக கேள்விக்குள்ளாக்குகிறது.. காவல்துறையின் அட்டூழியத்தின் மீது கவனத்தை ஈர்ப்பதோடு, 1990 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்தும் கதை விவாதிக்கிறது. அர்ப்பணிப்போடு கூடிய, பணிவான ஒரு அரசு ஊழியராக இருந்த குமாரேசன் அமைப்பை எதிர்த்து கேள்வி எழுப்புவராக உருவெடுத்து தனது அப்பாவித்தனத்தை இழக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்ட சூழ்நிலைகள் மீது விடுதலை பகுதி 1, திரைப்படம் கவனம் செலுத்துகிறது, விசாரணை என்ற பெயரில் காவல்துறை நடத்தும் அனைத்து அட்டூழியங்களையும் – நம்மில் பலரைப் போலவே – கண்டும் காணாத ஒரு மௌன சாட்சியாக அவர் மாறுகிறார். சூரி தனது கதாபாத்திரத்தின் அப்பாவித்தனத்தையும் நிராதரவான தன்மையையும் திறம்பட வெளிப்படுத்துகிறார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில்,
“விடுதலை படத்தின் மீது ரசிகர்கள் பொழிந்த அன்பு என்னை மிகவும் நெகிழவைத்துவிட்டது. இந்தத் திரைப்படத்திற்கான எதிர்வினைகள் ஊக்கமளிப்பதாகவும் திருப்தியளிப்பதாகவும் இருந்தது. இதில் நான் வெளிப்படுத்தியிருக்கும் எனது கண்ணோட்டத்துக்கு ஆதரவளித்து தங்களை முழுமையாக அர்ப்பணித்த எனது நடிகர்கள் மற்றும் திரைப்படக் குழுவினர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பாக்ஸ் ஆபீஸில் அடைந்த பெரும் வெற்றிக்குப் பிறகு, சிறந்த உள்நாட்டு OTT தளமான ZEE5 வழியாக டைரக்டர்ஸ் கட் காட்சிகளையும் உங்கள் திரைக்குக் கூடுதலாகக் கொண்டு வருவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். இப்போதே கண்டு மகிழுங்கள் ”.என்று கூறினார்
நடிகர் சூரி கூறுகையில்,
“வெற்றிமாறன் சார் தனிப்பட்ட முறையில் ஒரு நிறுவனமாகத் திகழ்கிறார், அனைத்து நடிகர்களும் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறார்கள். ஆகவே விடுதலை படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும் ஒரு வாய்ப்பு கிடைத்தபோது, அது எனது வாழ்க்கையை புரட்டிப்போடும் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதை முன்கூட்டியே நான் அறிந்தேன். விடுதலை திரைப்படத்தில் நடித்தது செழுமையான, மகிழ்ச்சிகரமான மற்றும் ஆழ்ந்த அனுபவத்தையும் அளித்தது. மற்றும் அதில் ஒரு பகுதியாக செயல்பட வாய்ப்பளித்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மேலும், என் மீது மிகுந்த அன்பு பாராட்டிய ரசிக்கப் பார்வையாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ZEE5 இல் உலகளவிலான டிஜிட்டல் பிரீமியர் மூலம் விடுதலை திரைப்படம் வெளியிடப்படுவது உலகம் முழுவதும் உள்ள பல ரசிகர்களை சென்றடையும் என்று நம்புகிறேன்.
‘விடுதலை – பகுதி 1’ தமிழில் ZEE5 இல் மட்டுமே இப்போது பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது