கோடியில் ஒருவன் ரொமான்ஸ் படமா? ஆக்‌ஷன் படமா?

விஜய் ஆண்டனி, ஆத்மிகா இணைந்து நடித்துள்ள படம், ‘கோடியில் ஒருவன்’. செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயாரிக்கும் இந்தப்படத்தை ‘மெட்ரோ’  எனும் வெற்றிப் படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார்

வியாபார ரீதியாக விநியோகஸ்தர்கள் விரும்பும் ஹீரோக்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இவரது பல படங்கள் விநியோகஸ்தர்களுக்கு லாபகரமாகவே இருந்துள்ளது. இவரது ‘பிச்சைக்காரன்’ படம் பல விநியோகஸ்தர்களை லட்சாதிபதி ஆக்கியது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனியின் ஒவ்வொரு படங்களுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்குள்ளாகும். அதே போல் வரும் ஏப்ரலில் வெளியாகும் ‘கோடியில் ஒருவன்’ படமும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

‘கோடியில் ஒருவன்’ படத்தை பற்றி இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கூறியதாவது..

விஜய் ஆண்டனி டியூசன் மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் வெறும் பாடப் புத்தகத்தை சொல்லிக்கொடுக்கும் டியூசன் மாஸ்டர் இல்லை. நம்மை சுற்றி நடக்கும், சமூக அரசியலை சொல்லிக்கொடுக்கும் மாஸ்டர். பல படங்களில் பிரச்சனைகளுக்கு தீர்வு சரியாக சொல்லப்படாமல் இருக்கும். நான் அதற்கான தீர்வை சொல்லியிருக்கிறேன்.

சமந்தமே இல்லாமல் நம்மை தேடிவரும் பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை, விஜய் ஆண்டனியின் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக்கதை அவரை மனதில் வைத்துக்கொண்டு எழுதியிருக்கிறேன்.

விஜய் ஆண்டனியிடம் படிக்கும் மாணவியாக ஆத்மீக நடித்துள்ளார். இருவருக்கும் இடையே இருக்கும் ரொமேன்ஸ் காட்சிகள் சிறப்பாக இருக்கும். மொத்ததில் ஒரு ஜனரஞ்சகமான படம். இதுவரை விஜய் ஆண்டனி நடித்துள்ள படங்களிலேயே ‘கோடியில் ஒருவன்’ தான் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்  சார்பாக கோ. தனஞ்செயன் , இப்படத்தை வெளியிடுகிறார். என்றார், படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்னன்