கொரோனா வட்டத்துக்குள் நடிகர் விஜய்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும், இன்னும் பெயரிடப்படாத படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவருக்கு 65 வது படமாகும். இந்தப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி இந்தப்படக் குழுவினரை சேர்ந்த சுமார் 100 பேர் பாடல் மற்றும் சண்டைக் காட்சிகள் படபிடிப்புக்காக ஜார்ஜியா நாட்டுக்கு சென்றனர்.

திட்டமிட்டபடி ஜார்ஜியா நாட்டில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் படப்பிடிப்பு குழுவினரை சேர்ந்த 2 பேருக்கு உடல்நிலை மாற்றம் ஏற்பட்டதை அடுத்து செய்த பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

கொரோனா தொற்று கண்டறியபட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம். இதனையடைத்து படக்குழுவினரிடையே ஒரு விதமான அச்சம் ஏற்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் கூடுதல் பாதுகாப்புடன் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.