விஜய் நடிக்கும் 66 வது படம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தெலுங்கு நடிகர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 66 வது படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடந்து வருகிறது. தமன் இசையமைத்து வரும் இப்படத்தை வம்சிக்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரித்து வருகிறது.

விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் இப்படம் குறித்த தொடர் அப்டேட்ஸ் ரசிகர்களை உற்சாகப் படுத்தி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு  மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் சரத்குமார், ஷாம், பிரகாஷ் ராஜ், பிரபு, யோகிபாபு, சங்கீதா, ஜெயசுதா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் பிரகாஷ் ராஜ் விஜய்யுடன்  எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தான் நடிப்பதை உறுதி செய்திருந்தார். இந்நிலையில் விஜய்யுடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

இதை உறுதி செய்யும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட படம் வெளியாகி வைரலாகி வருகிறது.