சென்னை கோயம்பேடு சந்தையில் கூலி தொழிலாளியின் மகள், மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில், 2 தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்த தங்கமங்கையை மேலும் உற்சாக படுத்தும் விதமாக அகில இந்திய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் குமரன் மற்றும் சென்னை மாவட்ட தலைவர் தேவா ஆகியோர் இலக்கியாவுக்கு நேரில் சென்று தங்கத்தை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துள்ளனர் .