20 கெட்டப்புகளில் ‘சீயான்’ விக்ரம்!

தமிழ் நடிகர்களில் தங்களது உடல் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றியமைத்து நடித்து வருபவர்கள் கமலும், விக்ரமும் தான். கூனன் கதாபாத்திரத்திற்காக சுமார் 53 கிலோ உடல் எடையை குறைத்து விக்ரம் யாரும் செய்யத்துனியாத ஒன்றை ‘ஐ’ படத்தில் செய்தார். இப்படி பல படங்களில் உடல் எடையை ஏற்றி, இறக்கி நடிப்பிற்காக முழு அர்ப்பனிப்பையும் கொடுப்பவர். தற்போது ‘ டிமான்ட்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் ‘கோப்ரா’ படத்தில் 20 விதமான தோற்றங்களில் நடித்து வருகிறார்.

தசாவதாரம் படத்தில் கமல் 10 விதமான தோற்றங்களில் நடித்தது இந்திய சினிமாவில் சாதனையாக பார்க்கப்பட்டது. இநிலையில் விக்ரம் ‘கோப்ரா’ படத்தில் 20 விதமான தோற்றங்களில் நடித்து, கமலின் சாதனையை உடைத்து புதிய சாதனையை உருவாக்கியுள்ளார். இது விக்ரமின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ‘கோப்ரா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வியாபார ரீதியாகவும் பல சாதனைகளை படைக்க அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

விக்ரமுடன், ஶ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார்,ஆனந்த்ராஜ் இவர்களுடன் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் கோப்ரா படத்தினை எஸ்.எஸ்.லலித் குமார், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரித்து வருகிறார்.

இன்று வெளியிடபட்ட ‘கோப்ரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமூக வலை தளங்களில் ட்ரென்ட் ஆகிவருகிறது.