விஷால் எனக்கு நல்ல நண்பர் ! – கீர்த்தி சுரேஷ்

சண்டக்கோழி 2 படத்தில் ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் கூறியதாவது..  லிங்குசாமி சாருக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.இந்த கதை கேட்கும் போது ரொம்ப டென்ஷனாக இருந்தேன் மீராஜாஸ்மீன் மேடம் பற்றி எல்லாருக்கும் தெரியும் சண்டைகோழி முதல் பாகத்தில் எப்படி நடித்திருப்பார் என்று.அதை நான் எப்படி பண்ண போகிறேன் என்ற பயம் இருந்தது அந்த கதாப்பாத்திரம் கேட்ட பின் அதற்கு நிகராகவாது நடிக்க வேண்டும் என தோன்றியது.மகாநதி படபிடிப்பின் போதும் இந்த படம் தான் எனக்கு பெரிய ரிலாக்ஷாக இருந்தது.

விஷால்,லிங்குசாமி அவர்களுடன் படபிடிப்பு ரொம்ப மகிழ்ச்சியை தந்தது.மகாநதிக்கு பின் நான் விருப்பி நடித்த படம் சண்டைகோழி-2 தான்.பிருந்தா சார் ஒவ்வொரு வசத்தையும் அதற்கெற்றவாரு எனக்கு சொல்லிகொடுத்தார்.படத்தில் பாடல் எழுதிய அனைத்து பாடலாசிரியர்களுக்கும் நன்றி.யுவன் அவர்களுடைய இசையில் அனைத்து பாடல்களும் அருமையாக வந்துள்ளது.யுவனுக்கு நன்றி.பிரவீன் சாருக்கு நன்றி.விஷால் எனக்கு இந்த படத்தின் மூலம் நண்பராக கிடைத்துள்ளார் அவருக்கும் நன்றி.சக்தி அனைவரையும் அழகாக காட்டியுள்ளார். நன்றி.    என கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.