‘வெளவல்ஸ்’ – விமர்சனம்!

‘ரித்தி சித்தி ஃபிலிம்ஸ்’ சார்பில், ராஜு ஷ்ரீகர் தயாரித்து திலிப்குமார், ஹேமந்த் குமார், சங்கீத், சந்தோஷ் ரவி, ஜகன் ராஜேந்திரன் ஆகியோர் இயக்கத்தில், 5 குறும்படங்களாக தொகுக்கப்பட்ட, திரைப்படமே ‘வெளவல்ஸ்’. இதில், யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் ஐயப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நண்டு, தீபக் ரமேஷ், பரமேஷ், காஜல் செளத்ரி, பீட்டர்.கே, சரத் ரவி, அக்‌ஷிதா போபையா, பிரியங்கா சந்திரசேகர், பரத் போபண்ணா, விஜிதா வசிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கீர்த்தன் பூஜாரி மற்றும் சந்தீப் அல்லூரி இருவரும் ஒளிப்பதிவு செய்திருக்க, சரவணா சுப்ரமணியம் இசையமைத்துள்ளார்.

‘வெளவல்ஸ்’ திரைப்படத்தில் அட்ராக்‌ஷன், எமோஷன், இன்டிமசி, அப்செஷன் போன்ற உணர்வுகள் மூலம் காதல் வெவ்வேறு கோணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் ஐயப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நண்டு, தீபக் ரமேஷ், பரமேஷ், காஜல் செளத்ரி, பீட்டர்.கே, சரத் ரவி, அக்‌ஷிதா போபையா, பிரியங்கா சந்திரசேகர், பரத் போபண்ணா, விஜிதா வசிதா ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.

‘வெளவல்ஸ்’ திரைப்பட தொகுப்பில், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ளும் இளைஞனை, அதிலிருந்து காப்பாற்றி அறிவுரை சொல்லும் அந்தப் பகுதி ரசிக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது. யூகி சேதுவின் நக்கல், நையாண்டித்தனமான வசனங்களும், நடிப்பும் அனைவரையும் கவர்கிறது. அதைப்போலவே கடைசியில் இடம்பெறும் ஆக்‌ஷன் தொகுப்பும் ரசிக்க வைக்கிறது. மற்ற தொகுப்புகள் வெகுவாக கவரவில்லை. என்று தான் சொல்ல வேண்டும்.

ஒளிப்பதிவாளர்கள் கீர்த்தன் பூஜாரி மற்றும் சந்தீப் அல்லூரி இருவரும், ஓவ்வொரு கதைக்கும் வித்தியாசமான லைட்டிங் மற்றும் கோணங்களில், குறிப்பிடும்படி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.  சரவணா சுப்பிரமணியத்தின் பின்னணி இசையும், பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது. கடைசியாக இடம் பெறும் தொகுப்பில், இசை வெகுவாக கவர்கிறது.

காதலை வித்தியாசமான முறையில் ஐந்து இயக்குநர்களும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய முயற்சியை செய்திருப்பதற்காக பாரட்டலாம். அதை இன்னும் சுவாரசியாமாக சொல்லியிருந்தால் எல்லோராலும் ரசிக்கப்பட்டிருக்கும்.

மொத்தத்தில், ‘வெளவல்ஸ்’ , விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்களின் குறும்பட போட்டிக்கு சென்ற வந்த உணர்வினை ஏற்படுத்துகிறது.