ஆண்களுக்கு பைக், பெண்களுக்கு தங்கம் பரிசு!!! – தயாரிப்பாளர் ஹசீர் அதிரடி!

ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரிப்பில், கடந்த வாரம் திரைக்கு வந்து மக்களின் கவனம் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் படம் கன்னி மாடம்..போஸ் வெங்கெட் இயக்கியுள்ள இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்தியும், சாயா தேவியும் இணைந்து நடித்துள்ளனர்.

கன்னி மாடம் படத்தை பார்க்கும் பெண்கள் டிக்கெட்டுடன் சேர்த்து தங்களது கருத்துக்களை மொபைல் மூலமாக வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவு செய்ய வேண்டும். அப்படி சிறந்த கருத்துக்களை பதிவிடுபவர்களை தேர்ந்தெடுத்து தங்கபரிசு கொடுக்கப்படும் என அறிவித்துள்ளார் கன்னி மாடம் படத்தின் தயாரிப்பாளர் ஹசீர்.

முதல் பரிசு அரை சவரன் தங்கம். அதை தொடர்ந்து பல பரிசுகள் வழங்கப்படவுள்ளது.சினிமா பிரியரான ஹசீர் விதார்த் நடிப்பில் வெளியான வண்டி ப்படத்தை பார்த்து கருத்து கூறியவர்களுக்கு ‘பைக்’ பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடதக்கது.