வீரன் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்! –  ஹிப்ஹாப் தமிழா ஆதி!

சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்க, ‘மரகத நாணயம்’ படத்தினை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் வரும் ஜூன் 2 வெளியாகஇருக்கும் படம் ‘வீரன்’. இதில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, நடிகை ஆதிரா, முனீஸ்காந்த், காளிவெங்கெட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வீரன் படம் குறித்து நடிகர் ஆதி கூறியதாவது…

சத்யஜோதி பிலிம்ஸ் உடன் எனக்கு இது மூன்றாவது படம். மற்ற இரண்டு படங்களை போலவே இதுவும் வெற்றி அடையும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன். இதுவரை நான் நடித்த படங்களிலேயே இந்த படத்தில் தான், ஆக்ஷன் அதிகமாக இருக்கும். குதிரையிலே ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் இருக்கும். அதற்காக முறையாக கற்றுக் கொண்டேன்.

இன்று தமிழ் சினிமாவில் அனைத்து சூப்பர் ஸ்டார்களுடனும் நடித்துக் கொண்டிருக்கும் காளி அண்ணனும், முனீஸ்காந்த் அண்ணனும் இந்த படத்தின் நகைச்சுவைக்கு நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். இந்த படம் வெற்றி பெறுமேயானல், அவர்களுடைய பங்கும் மிகப் பெரியது.

புதிய திறமைகளை ஒவ்வொரு படத்திலும் எடுத்து வருவதை நாங்கள் எங்களுடைய பாக்கியமாக கருதுகிறோம். அந்த வகையில் இந்த படத்தில் சசி, அவருடைய நக்கலைட்ஸ் டீம், டெம்பிள் மங்கி என அனைவருடைய ஒத்துழைப்புக்கும் நன்றி.

‘சிங்கிள் பசங்க’,  ‘கேரளா டான்ஸ்’ என என்னுடன் ஆரம்பத்தில் இருந்து பயணித்து வந்த சந்தோஷ் மாஸ்டர் தான் இதற்கும் நடனம் அமைத்திருக்கிறார். இந்த கதைக்கு அந்த மண்சார்ந்த நடன அசைவுகள் நிறைய ஒர்க் செய்து எங்களுக்கும் அதை சொல்லிக் கொடுத்தார். இந்த படத்தில் நான் நடித்ததை விட கற்றுக்கொண்ட விஷயங்கள் நிறைய இருக்கிறது.

மண் சார்ந்த ஒரு சூப்பர் ஹீரோ என்பதால் அதற்கேற்ற உடைகளை கீர்த்தி நிறைய டிரையல் செய்து எடுத்து வந்தார். இதுபோல படத்தில் உள்ள அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் சிறந்த பணியை கொடுத்துள்ளனர். என்னதான் சூப்பர் மேன், அயர்ன் மேன் என இவை வந்தாலும் நம் மண் சார்ந்த சூப்பர் மேன்கள் என்பது எப்போதும் ஸ்பெஷல் தான். அந்த வகையில் எனக்கு 90’ஸ் கிட்ஸ் ஆக சக்திமான் எப்போதும் நாஸ்டலஜியா இருக்கிறது.

குழந்தைகளோடு குடும்பமாக கண்டிப்பாக இந்த ‘வீரன்’ படத்தை பார்க்கலாம். இன்னும் ஒரு 10 வருடம் கழித்து ‘வீரன்’ ஒரு நினைவில் நிற்கக்கூடிய சூப்பர் ஹீரோவாக இருக்கும். படத்தில் முகம் சுழிக்க வைக்கும் காட்சி ஒன்று கூட கிடையாது. இசையிலும் பல புதிய விஷயங்கள் பரிசோதித்து இருக்கிறோம். படம் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்” என்றார்.