‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ – விமர்சனம்!

‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ இத்திரைப்படத்தினை எழுதி, இயக்கி, ‘P R புரடக்‌ஷன்ஸ்’ சார்பில், தயாரித்து வெளியிட்டிருப்பதுடன், நாயகனாக நடித்திருக்கிறார், பால்ராஜ். நாயகிகளாக காயத்ரி ரேமா,  சுவேதா ஸ்ரீ இருவரும் நடித்திருக்க, அவர்களுடன் ரவி மரியா, அம்பானி சங்கர், பசங்க சிவக்குமார், மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு செய்திருக்கிறார், உதயன். இசையமைத்திருக்கிறார், விஜய் பிரபு. எடிட்டிங், கே சங்கர். நடனம், சந்துரு. சண்டைப்பயிற்சி, ஜாக்கி ஜான்சன்.

சினிமாவின் மீதுள்ள அதிகப்படியான ஆர்வத்தால், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் பால்ராஜ், தனக்கு தெரிந்த முறையில் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். திரைத்துறை இருக்கும் இன்றைய சூழலில், திரைப்படத்தை தயாரித்து வெளியிடுவது மிகவும் சிரமம். என்பது தெரிந்தும், அந்த சிரமங்களையும், தடைகளையும் தாண்டி இந்த திரைப்படத்தை வெளியிட்ட பால்ராஜுக்கு வாழ்த்துக்களும், பாராட்டும்.

சொந்தமாக கார் மெக்கானிக் ஷாப் வைத்திருக்கும் பால்ராஜூம், அவரது மனைவி காயத்ரி ரேமாவும் தங்களது ஒரே குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்கள். தாம்பத்ய ஈடுபாட்டில் தீரா மோகத்துடன் இருந்து வருகிறார், பால்ராஜ். இதற்கு நேர்மாறாக காயத்ரி ரேமா. இதனால் இருவருக்குள்ளும் பிரச்சனை இருந்து வருகிறது. நாட்கள் செல்லச் செல்ல இருவருக்குள்ளும் இருக்கும் பிரச்சனை பெரிதாக ஆகிறது. இந்நிலையில், குடிகார முறைமாமனை திருமணம் செய்து கொண்ட சுவேதா ஸ்ரீ, தாம்பத்ய வாழ்க்கையை வாழாமல் இருந்து வருகிறார். ஒரு நாள், தன்னுடைய காரை ரிப்பேர் செய்ய பால்ராஜ் மெக்கானிக் ஷாப் வருகிறார், சுவேதா ஸ்ரீ அப்போது இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது. வெவ்வேறுவருடன் திருமண வாழ்க்கையில் இருந்து வரும் நிலையில், அவர்களது வாழ்க்கை என்ன ஆனது என்பது தான், ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ மீதிக்கதை!

முன்னரே சொல்லியபடி, இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் பால்ராஜ், தனக்கு தெரிந்த முறையில் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’ திரைப்படத்தை, ஆர்வத்தின் மிகுதியில்  உருவாக்கியிருக்கிறார். ஒரு குறை சொல்ல முடியாத கதையை யோசித்திருக்கிறார். இரண்டு இளம் பெண்களின் வாழ்க்கை. அவர்களுக்கு கிடைத்த கணவன். அவர்களுடைய வாலிப பருவம் இவைகளை மய்யப்படுத்தி செல்ல வேண்டிய திரைக்கதை, தேவையற்ற காட்சிகளின் தொகுப்பாக சென்றுள்ளது. நாயகனாக பால்ராஜ் ஓரளவு நடித்திருக்கிறார். கதாநாயகளில் இருவரும் தங்களது திறமையை வெளிப்படுத்தி நடித்துள்ளனர். நடிகை காயத்ரி ரேமா,  டிராமா காட்சிகளுக்காகவும்,  நடிகை சுவேதா ஸ்ரீ, கிளாமருக்காகவும் பயன் பட்டிருக்கிறார்கள்.

தொழில் நுட்ப கலைஞர்களான ஒளிப்பதிவாளர் உதயன். இசையமைப்பாளர், விஜய் பிரபு. படத்தொகுப்பாளர்  கே சங்கர். நடன பயிற்சியாளர் சந்துரு. சண்டைப்பயிற்சியாளர் ஜாக்கி ஜான்சன் ஆகியோர் சுமாரான பங்களிப்பினை கொடுத்துள்ளனர்.

தயாரித்து, வெளியிட முடியும் அளவிற்கு சக்தி படைத்த, நடிகர், தயாரிப்பாளர் பால்ராஜ், இந்த படத்தை கொஞ்சம் கவனத்துடன் இயக்கியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்!