கே வி என் புரொடக்ஷன்ஸ் KVN Productions மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் Monster Mind Creations நிறுவனங்கள் இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன்-டிராமா திரைப்படமான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டின் மறுதேதியை நிர்ணயித்துள்ளதாக அறிவித்துள்ளனர். முதலில் 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், தற்போது மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் பிராந்திய அசாதாரண சூழ்நிலை காரணமாக இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி 2026 ஜூன் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’ மார்ச் 2 அன்று வெளியிட தயாராக இருந்தபோதிலும், தயாரிப்பாளர்கள் அந்த மியூசிக் வீடியோவை வெளியிடாமல் தற்காலிகமாக நிறுத்தி, இன்னும் ஒரு அல்லது இரண்டு நாட்களில் தொடங்கவிருந்த புரமோஷன் நடவடிக்கைகளையும் இடைநிறுத்த முடிவு செய்துள்ளனர்.
கே வி என் புரொடக்ஷன்ஸ் KVN Productions மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் Monster Mind Creations வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை:
‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ என்பது உலகளாவிய பார்வையாளர்களுக்காக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்ட இந்த படம், இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுடன் இணைவதற்கான நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக செய்த அர்ப்பணிப்பு மிக்க உழைப்புக்குப் பிறகு, இந்த படத்தை மார்ச் 19 அன்று உங்களுடன் பகிர ஆவலாக இருந்தோம். ஆனால் தற்போதைய நிலைமையில், குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை, எங்கள் படத்தை மிக அதிகமான பார்வையாளர்களை சென்றடையச் செய்யும் நோக்கத்தை பாதிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. எனவே எங்கள் விநியோக கூட்டாளிகள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு, மிகுந்த யோசனைக்குப் பிறகு வெளியீட்டு தேதியை மாற்றும் கடினமான முடிவை எடுத்துள்ளோம். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டாக்ஸிக் திரைப்படத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யாஷ் எழுதியுள்ள இந்த படத்தை, கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள, இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.