நடிகரும் தயாரிப்பாளருமான யாஷ், தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஸ்ரீ சதாசிவ ருத்ர சூர்யா கோயில், தர்மஸ்தலாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாதேஸ்வரர் கோயில் மற்றும் கர்நாடகாவில் உள்ள சுப்ரமண்யாவில் உள்ள குக்கே சுப்ரமண்யா கோயில் என பல கோயில்களில் வழிபாடு செய்தனர்.
புதிய திரைப்படத்தை தொடங்குவதற்கு முன்பாக, குடும்பத்தினருடன் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்திருக்கிறார், நடிகர் யாஷ். கீது மோகன்தாஸ் இயக்கவிருக்கும் ‘டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பெங்களூரில் துவங்கியுள்ளது.
இத்திரைப்படம் துவங்கும் ஆகஸ்ட் 8, 2024 அன்று (8-8-8) தேதியின் கூட்டுத்தொகை 8-8-8 ஆகும். என்றும், ராக்கிங் ஸ்டார் யாஷுக்கு ராசியான நம்பரான 8 என்றும் கூறப்படுகிறது.
மேலும் இது அவரது பிறந்த தேதியுடன் பொருந்துவதாகவும்,அவர் பிறந்த நாளில் தான், டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.