கென் கருணாசின் யூத் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் அடையாளம்! – தனுஷ்!

‘பார்வதா என்டர்மெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில், கருப்பையா சி. ராம் தயாரிப்பில்,  ‘அசுரன்’, ‘விடுதலை 2’ திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான  கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக  கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “யூத்”. அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ்,ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் மார்ச் 19-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் திரைப்பட முன் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்,

நடிகர் கருணாஸ் பேசியதாவது..,

இந்த நிகழ்வில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இருவரும் ஒன்றாக இருப்பது மிகவும் பெருமையான தருணம்.  “கென்னை ஒரு நடிகராக அடையாளப்படுத்தியது வெற்றிமாறன். அதே நேரத்தில் அவரிடம் இருந்து இயக்கம் கற்றுக்கொள்ள வாய்ப்பு கொடுத்தது தனுஷ். இந்த இருவரும் இங்கே வந்து அவனுக்காக நிற்பது எங்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி”.

தனுஷ் “நான் அவரை முதன்முதலாக சந்தித்த போது அவர் மிகவும் இளம் வயதில் இருந்தார். ‘காதல் கொண்டேன்’ படத்தை பார்த்த பிறகு, தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய நடிகர் கிடைத்திருக்கிறார் என்று நான் சொன்னேன். இன்று இந்திய சினிமாவில் இரண்டு தேசிய விருதுகளை பெற்ற நடிகர் என்ற பெருமையை தனுஷ் பெற்றுள்ளார்”.

“நான் சிறு வயதிலிருந்தே மேடைகளில் இருந்து மக்களை சந்தித்து வருகிறேன். சினிமாவை நாம் உண்மையாக நேசித்தால், சினிமா ஒருபோதும் நம்மை கைவிடாது என்று நான் நம்புகிறேன்” கென் இந்த படத்தை உருவாக்க மிகவும் கடினமாக உழைத்துள்ளார், தயாரிப்பாளர் கருப்பையா மற்றும் அவரது குழுவினர் இந்த படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கியுள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சம்பளம் கேட்காமல் இந்த படத்திற்கு இசை அமைத்ததற்கு நன்றி. இறுதியாக, “இந்த படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தின் சார்பாக நன்றி. ‘யூத்’ படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” நன்றி.

தயாரிப்பாளர் கருப்பையா பேசியதாவது..,

கென்னை எனக்கு நல்ல பழக்கம் அவர் கதை வைத்து சுற்றிக்கொண்டிருந்த போது நானும் படம் செய்ய சுற்றிக் கொண்டிருந்தேன். ஒரு தயாரிப்பில் என்னை செய்ய சொன்னபோது நான் கென் கதையை முதலில் செய்யலாம் என முடிவு செய்து கதை கேட்டேன் கதை எனக்கு மிகவும் பிடித்தது. பின் அந்த தயாரிப்பு நிறுவனம் வாங்கியது. ஆனால் இந்தப்படத்தை விட மனமில்லை என்ன ஆனாலும் ஓகே என நானே இப்படத்தை ஆரம்பித்தேன். கென் அற்புதமாக இப்படத்தை உருவாக்கி தந்தார். படம் விற்பனையும் ஆகிவிட்டது. படம் மிக நன்றாக வந்துள்ளது. இந்த பயணத்தில் துணை நின்ற அனைவருக்கும் நன்றி. என் குடும்பத்தாருக்கு நன்றி.

இப்படத்தில் பணியாற்றிய சுராஜ் சார், நாயகிகள் உட்பட நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு நன்றி. நான் தனுஷ் சாரின் தீவிர ரசிகன் அவர் வந்து வாழ்த்தியது பெருமை. வெற்றிமாறன் சாருக்கு மிகப்பெரிய நன்றி அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பேசியதாவது…

“தனுஷ் மற்றும் வெற்றிமாறன் போன்ற மிகவும் ஸ்ட்ரிக்ட் டைரக்டர்களிடம் கற்றுக்கொண்ட ஒரு பையன் தான் கென். ஆனால் அவர் ஒரு பேக் பெஞ்சர் மாதிரி ஜாலியாக ஒரு யூத் படத்தை எடுத்திருக்கிறார். பள்ளி பின்னணியில் பசங்களின் வாழ்க்கையை வைத்து ஒரு கலகலப்பான படம் பண்ணியிருக்கிறார் கருணாஸ் மூலம் தான் இந்த படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது, நான் முதல் படத்தில் நடிக்கும் போது அவரிடம் இருந்து தன்னுக்கு நிறைய நம்பிக்கை கிடைத்தது, அதற்காகவே அவர் மகன் படத்தில் வேலை செய்ய நினைத்தேன்.

இந்த படத்தில் நடித்த தேவதர்ஷினி, நளினி, சுராஜ் மற்றும் மூன்று ஹீரோயின்களான பிரியாஞ்சி, மீனாட்சி, அனிஷ்மா எல்லோரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். ‘யூத்’ படம் கண்டிப்பாக ஒரு நல்ல யூத் என்டர்டெயினராக இருக்கும். இந்த படக்குழுவுக்கு என் வாழ்த்துகள். படம் பெரிய வெற்றி பெற வேண்டும்” நன்றி.

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது..,

“இவ்வளவு பாசிட்டிவாக ஒரு முழு யூனிட்டாக வேலை செய்வது எல்லா படங்களிலும் நடக்காது. சில படங்களுக்கே அது அமையும். ஒரு டீம் இப்படியாக ஒன்றுபடுவதற்கு முக்கிய காரணம் அந்த படத்தை வழிநடத்தும் இயக்குநரின் நம்பிக்கையும் மனநிலையும் தான்” கென்னுக்கு என் வாழ்த்துக்கள்.  கென்  கதை சொல்லிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது, ஒவ்வொரு காட்சிக்கும் இசை மற்றும் உணர்வுகளை இணைத்து மிகவும் மெட்டிக்குலஸாக கதையை விளக்கினார்.

“கென் ஒரு நடிகராகவும், இயக்குநராகவும் தானாக உருவான ஒருவராக இருக்கிறார். அவருக்கு தனுஷ் அளித்த நம்பிக்கையும் ஆதரவும் அவருக்கு பெரிய தைரியம் கொடுத்துள்ளது”. என்னைவிட தனுஷ் அவரை அதிகம் நம்பினார் செதுக்கியிருக்கிறார்.“கருணாஸ் மற்றும் கிரேஸ் அவர்களுக்கு இது மிகவும் பெருமையான தருணம். இந்த ‘யூத்’ படம் கண்டிப்பாக நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன்”  வாழ்த்துக்கள்.

இயக்குநர் நடிகர் கென் கருணாஸ் பேசியதாவது..,

“இந்த படத்தில் என்னை நம்பி நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நான் மிகவும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் இந்த படம் உருவாகியிருக்காது. என்னை முதலில் நடிகராக அறிமுகப்படுத்திய மறைந்த இயக்குநர் தாமிரா அவர்களை நினைவுகூறுகிறேன் அவர் ஆசிர்வாதம் இருக்குமென நம்புகிறேன்.  அதேபோல் இயக்குநர் வெற்றிமாறன் எனது திறமையை கண்டுபிடித்து ஊக்கமளித்தவர் அவருக்கு  நன்றி.

தனுஷ் சார் தெரிந்தோ தெரியாமலோ அவர் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறார். இன்று நான் இயக்குநராக இந்த மேடையில் நிற்பதற்கு அவர் ஒரு முக்கிய காரணம்” அவருக்கு என் நன்றி.  அவர் முன்னால் நான் இயக்குநராக மேடையில் நிற்பது பெருமை. இந்த படத்தை தயாரித்த கருப்பையா மற்றும் அவரது குழுவினருக்கும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அளித்த ஆதரவுக்கும் நன்றி. இந்த ‘யூத்’ படம் மார்ச் 19 அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளில் வந்து இந்த படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் நன்றி.

நடிகர் தனுஷ் பேசியதாவது..,

முதலில் தயாரிப்பாளர் கருப்பையாவுக்கு பாராடுக்கள். “23 வயது இளைஞன் சொன்ன கதையை நம்பி இந்த படத்தை தயாரித்தது மிகப் பெரிய தைரியம். நாளை இந்த படம் பெரிய வெற்றி பெற்றாலும் அந்த வெற்றியின் முதல் உரிமையாளர் கருப்பையாதான்”. கென் எப்போதும் அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும்.

ஒரு படத்திற்கு ஒரு அடையாளம் இருக்கும். ‘துள்ளுவதோ இளமை’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா எப்படி இருந்தாரோ, அதேபோல் ‘யூத்’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் ஒரு முக்கியமான அடையாளமாக இருக்கிறார். பணம் வாங்காமல் அவர் இசையமைத்தது தந்தது அவரது பெருமை. அவருக்கு கென் சார்பில் என் நன்றி. படத்தில் நடித்த சுராஜ், தேவதர்ஷினி, நளினி மற்றும் மூன்று ஹீரோயின்களுக்கும் வாழ்த்துகள். அனிஷ்மா சிறை படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார் வாழ்த்துக்கள். ஒளிப்பதிவாளர் விக்கி மற்றும் காஸ்ட்யூம் டிசைனர் ஆகியோர் இந்த படத்திற்கு ஒரு பெரிய வலிமையாக உள்ளனர்.

அசுரன் படத்தில் முதலில் கென்னைப் பார்த்தபோது எனக்கு நம்பிக்கை இல்லை. அவரை வேண்டாம் என்று தான் சொன்னேன். ஆனால் முதல் ஷாட்டிலேயே அவர் மிகுந்த நம்பிக்கையுடன் நடித்ததை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அவரை கண்டுபிடித்த பெருமை முழுவதும் வெற்றிமாறனுக்கே சேரும். இந்த வயதிலேயே இவ்வளவு தைரியமாக படம் எடுக்க முடிவு செய்தது பெரிய விஷயம். அவர் படமெடுக்கிறேன் என்று சொன்ன போது,  நான் இப்போது வேண்டாமே என்றேன் ஆனா அதை தவறென்று நிரூபித்திருக்கிறார்.

“முன்னாடி நாங்கள் சினிமாவுக்கு வந்த போது, சீனியர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. இன்றைய இளம் தலைமுறை 20–25 வயதிலேயே மிக வேகமாக முன்னேறுகிறார்கள். இப்போது நாங்கள்தான் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கென் இந்த வயதில் இவ்வளவு பெரிய பொறுப்புடன் ஒரு படத்தை இயக்குவது சாதாரண விஷயம் இல்லை. அவருடைய உழைப்பும் நம்பிக்கையும் பாராட்டத்தக்கது. இந்த வயதில் பலர் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் கேன் தனது கவனத்தை முழுவதும் தனது கனவு மற்றும் குடும்பத்தின் மீது வைத்திருக்கிறார். அதற்காக அவருக்கு வாழ்த்துகள். யூத் படம் பெரிய வெற்றி பெற்று, கேனுக்கும் அவரை நம்பி வந்த முழு படக்குழுவுக்கும் ஒரு பெரிய ஆசீர்வாதமாக அமைய வேண்டும் வாழ்த்துக்கள். என்றார்.

பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள “யூத்” திரைப்படம், மார்ச் 19-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.