அதிரடி – ஆக்ஷன் திரைப்படமான வலிமையை உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளி பரப்பிய ஜீ தமிழ் தொலைக்காட்சி, வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் 7 வாரங்களுக்கும் 7 புத்தம் புதிய திரைப்படங்களை ஒளி பரப்ப இருக்கிறது.
அதில் முதலாவதாக மே 8, ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளிபரப்பாகவுள்ள, நந்தமுரி பாலகிருஷ்ணாவின்‘அகண்டா’ திரைப்படத்துடன் இந்த கோடைக் கொண்டாட்டம் ஜீ தமிழில் துவங்கவுள்ளது. இப்படத்தினை போயபட்டி சீனு இயக்கி இருக்கிறார்.