அதி தீவிர நிமோனியா பாதிப்பில், சசிகலா!

பெங்களூரு: மறைந்த முன்னாள் முதலமைச்சர், ஜெயலலிதாவின் உயிர் தோழியாகவும், உற்ற துணையாகவும் விளங்கியவர் சசிகாலா. சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ராஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

சசிகலாவின் தண்டனைக் காலம் வரும் ஜனவரி 27ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அவருக்கு தீவிர நுரையீரல் தொற்று காரணமாக நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனுடன் கொரோனா தொற்றும் உறுதியாகியுள்ளது. இது குறித்து விக்டோரியா அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிக்சை அளித்து வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு போன்ற பிரச்சினைகளும் உள்ளன. இதனால் அவரது உடல்நிலை மருத்துவர்களால் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது