‘எக்கோ’ திரைப்படக்குழுவினருக்கு நடிகர் பார்த்திபன் வாழ்த்து!

ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப், பூஜா ஜாவேரி ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும்  படம் ‘எக்கோ’. காளி வெங்கட், ஆஷிஷ் வித்யார்த்தி, ஸ்ரீநாத், டெல்லி கணேஷ் பிரவீனா மற்றும் கும்கி அஸ்வின்  உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை டாக்டர்.ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்குகிறார்.

‘எக்கோ’படத்தின் டீசரை பார்த்த நடிகர் விஜய் ஆண்டனியும், பார்த்திபனும்  அக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

https://youtu.be/tukveeHxW2k