‘கட்டம் சொல்லுது’ : விமர்சனம்.

தயாரிப்பு : கண்ணா கணேசன் புரொடக்சன்.

இயக்கம் : எஸ் ஜி எழிலன்

நடிகர்கள் : எஸ் ஜி எழிலன், தீபா சங்கர், டி. திடியன், கா. சின்னதுரை, சகுந்தலா சின்னதுரை.

‘கட்டம் சொல்லுது’ படத்தின் கதாநாயகனும், இயக்குனருமான எஸ். ஜி. எழிலன் நான் ‘சுயம்பு’, யாரிடமும் உதவியாளராக பணியாற்றவில்லை. என்பதை இயக்குனர் சுந்தர்.சி மூலம் உரக்க சொல்கிறார். அவரது கதையும், திரைக்கதையும் வித்தியாசமாகவே இருக்கிறது.

கணவனை இழந்தவர் தீபா சங்கர். அருள் வாக்கு சொல்லும் ஒரு பெண்ணின் பேச்சைக்கேட்டு தன்னுடைய மகளுக்கு குறிப்பிட்ட தேதியில் கல்யாணம் செய்து வைப்பதற்காக, மாப்பிள்ளை பார்ப்பதற்கு முன்னரே மண்டபம், மேள தாளம் என அனைத்தையும் செய்துவிட்டு மாப்பிள்ளை தேடுகிறார்.

கல்யாணம் நடந்தா? இல்லையா? என்பதே படத்தின் கதை.

ஜாதகம் மற்றும் அதை சுற்றி நடக்கும் மூடத்தனத்தை மெல்லிய நகைச்சுவை திரைக்கதை மூலம் சுவாரஷ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.

நாயகன் எஸ். ஜி. எழிலன் தினமும் செய்யும் சின்னச் சின்ன சேட்டைகளுக்காக போலீஸ்காரரான அவரது அப்பாவிடம் அடிவாங்கும் காட்சியே சிறந்த திரைக்கதை தான். அதேபோல் தமிழ் வாத்தியாரின் காமெடியும் சிரிப்பினை வரவழைக்கிறது. சித்தரிக்கப்பட்டுள்ள பல கேரக்டர்கள் பரிச்சயப்பட்டவை தான்.

யதார்த்தமான காட்சியமைப்புகளால், படத்தில் நடித்திருந்த அனைவரும் புதுமுகங்கள் என்றாலும், முடிந்த அளவு நடித்துள்ளனர். பல இடங்களில் இவர்களது நடிப்பு பாராட்டும் படியாகவே இருக்கிறது. சில இடங்களில் சற்று சோர்வைத் தருகிறது.

எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா போன்றோரை வைத்து ஒரு மீடியம் பட்ஜெட்டில் தயாரித்திருந்தால் பெரிய வெற்றி பெற்றிருக்கும்!!