இயக்குனர் சிவானி செந்தில் இயக்கத்தில் உருவாகி வரும் படம், ‘டேக் டைவர்ஷன்’ . இதில் ‘பேட்ட’, ‘சதுரங்கவேட்டை’ படங்களில் வில்லனாக நடித்த ராமச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அறிமுக நாயகனாக சிவகுமார் நடிக்க, நாயகியாக பாடினி குமாரும் இரண்டாம் கதாநாயகியாக காயத்ரியும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜான் விஜய் தான் வில்லன். விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் ஆகியோரும் நடித்துள்ளனர்.
படத்திற்கு இசையமைத்துள்ளவர் ஜோஸ் பிராங்க்ளின். இவர் ஏற்கெனவே ‘நெடுநல்வாடை’, ‘என் பெயர் ஆனந்தன்’ படங்களின் மூலம் நல்லதொரு அறிமுகம் பெற்றிருப்பவர். இந்தப்படத்தில் இசையமைப்பாளர் தேவா பாடி, நடன இயக்குநர் சாண்டி நடனமாடியிருக்கும் ‘மஸ்தானா மாஸ் மைனரு ‘ என்கிற கானா பாடல், இணைய உலகில் லட்சக்கணக்கானவர்களின் பார்வைகளைப் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
‘டேக் டைவர்ஷன்’ விரைவில் வெளியாக இருக்கிறது.