சத்யம் சினிமாஸை கைப்பற்றிய பிவிஆர் நிறுவனம்

‘சத்யம் திரையுரங்கு’ சென்னையில் மிகவும் பிரபலமானது. 1974ம் ஆண்டு துவங்கப்பட்ட சத்யம் சினிமாஸ் தற்போது எஸ்2, எஸ்கேப், பலாசோ, தி சினிமா என பலபெயர்களில் பிரபலமாக இயங்கி வருகிறது. தயாரிப்பாளர்களும், நடிகர்களும் இந்த திரையரங்கில் படம் வெளியிடுவதை ஒரு கௌரவ அடையாளமாகவே கருதி வருகின்றனர்.

தென்னிந்தியாவின் முக்கிய திரையரங்க நிறுவனமான சத்யம் சினிமாஸின் அநேக பங்குகளை 850 கோடி ரூபாய்க்கு  பிவிஆர் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் மூலம் பி.வி.ஆர் நிறுவனம் சத்யம் சினிமாஸ்-சை கைவசப்படுத்தியுள்ளது.

பிவிஆர் நிறுவனம் தமிழகத்தில் இதற்குமுன்பே இயங்கி வந்ததாலும் எஸ்பிஐ சினிமாஸின் பங்குகளை வாங்கியதன் மூலம், மேலும் அந்நிறுவனம் விரிவடைந்துள்ளது.

2020 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 1000 திரையரங்குகள் அமைப்பதே, பிவிஆர் நிறுவனத்தின் நோக்கம் என அந்நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான அஜய் பிஜிலி தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது. அவர் மேலும் கூறும்போது ‘ சத்யம் சினிமாவை இதுவரை நிர்வகித்து வந்த கிரண் ரெட்டி,ஸ்வரூப் ரெட்டி ஆகியோரே நிர்வகிப்பார்கள் அத்துடன் சத்யம் எனும் பெயரிலேயே இயங்கும்’ என்றார்.