2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சூர்யா வழங்கும் , கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ” கடைக்குட்டி சிங்கம் “ இப்படம் கடந்த வாரம் வெள்ளிகிழமை அன்று வெளியாகி குடும்பங்கள் மற்றும் தாய்மார்களின் பேராதரவோடு அனைத்து சென்டர்களிலும் வெற்றிநடை போட்டுவருகிறது.
வெகுநாட்களுக்கு பிறகு குடும்பங்கள் கொண்டாடும் படைப்பாக இப்படம் வந்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று ஓடி வருகிறது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் விநியோகஸ்தகர் “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல் வெற்றியை தந்துள்ள நாயகன் கார்த்தியை சந்தித்து அவருக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
கடைக்குட்டி சிங்கம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வசூலை அள்ளிவருவது குறிப்பிடத்தக்கது.