பிரதமர் மோடியை திருமணத்திற்கு அழைப்பு விடுத்த  சுந்தர் சி  – குஷ்பு!

நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு இயக்குனர் நடிகர் சுந்தர் சி தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் அனந்திகா புதிய படமொன்றில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில்,மூத்த மகள் அவந்திகாவின் திருமண அழைப்பிதழை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வழங்கி திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.உடன் மகள் அவந்திகாவும் மருமகன் ஷ்ரவன் சீனிவாசனும் இருந்துள்ளனர் . இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதுகுறித்து குஷ்பு தனது எக்ஸ் தள பதிவில்,

”இன்று டெல்லியில் இந்தியாவின் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்திக்கும் பெரும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. எனது கணவர் சுந்தர் சி அவர்களும் நானும் இணைந்து எங்கள் மகள் அவந்திகாவுக்கும் ஷ்ரவன் சீனிவாசன் அவர்களுக்கும் நடைபெறவுள்ள திருமணத்திற்கு அவரை அழைத்தோம். பிரதமர் அந்தத் தம்பதியினரை வாழ்த்தினார்” என பதிவிட்டுள்ளார்.

அவந்திகா – ஷ்ரவன் சீனிவாசன் திருமணம் எங்கே, எப்போது என்ற அதிகாரப்பூர்வ தேதியோ , மாப்பிள்ளை ஷ்ரவன் சீனிவாசன் யார் என்ற விபரமோ இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், ஷ்ரவன் சீனிவாசன் தொழிலதிபர் குடும்பத்தை சேர்ந்தவர். என்றும் சினிமா துறையை நேரடியாக சேர்ந்தவர் இல்லை. என்றும் கூறப்படுகிறது. நெருங்கிய வட்டாரங்களுக்கு மட்டுமே தெரிந்த நிலையில் குஷ்பு – சுந்தர் சி குடும்பத்தினர் தங்களது மகளின் திருமண ஏற்பாடுகளை மிகவும் ரகசியமாக ஏற்பாடு செய்து வருகின்றனர்.