சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் – சீயான் விக்ரம் நடிக்கும் படம்!

Cricketer Irfan Pathan all set to make film debut with actor Chiyan Vikram

‘டிமான்டி காலனி’. ‘இமைக்கா நொடிகள்’ படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்   நடிக்கிறார்.

சீயான் விக்ரம்  நடிக்கும் பெயரிடப்படாத 58 வது படத்தில் இர்ஃபான் பதான்   நடிப்பது படக்குழுவினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகிறார்.

2006 ஆம்  ஆண்டு  நடந்த  டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களை வீழ்த்தி, ஹாட்ரிக் எடுத்து சாதனை புரிந்த இர்பான், திரைத்துறையில் சாதனை புரிவாரா?

லலித் குமாரின் ‘ செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ்’ தயாரிக்க, அஜய் ஞானமுத்து இயக்கும் இந்தப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர். ரகுமான்  இசையமைக்கிறார்.

இப்படத்தில் பணியாற்ற இருக்கும் மற்ற  நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.