புதிய சாதனை படைத்த விஜய்யின் ‘பிகில்’

Trailer of Vijay’s Bigil has hit 10.5 million likes inn few hours

அட்லீ இயக்கத்தில் விஜய், நயந்தாரா நடித்துள்ள படம் ‘பிகில்’. திட்டமிடப்பட்டிருந்த பட்ஜெட்டிற்கு மேலாக இந்தப்படத்தை தயாரித்துள்ளனர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம்,கல்பாத்தி எஸ். கனேஷ்,கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர்.

‘பிகில்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ள ஸ்கிரீன் சீன் நிறுவனம் தீபாவளியன்று வெளியிடுகிறது.

‘பிகில்’ படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 12-ம் தேதி மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட்டது.

இணையத்தில் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் சுமார் 10 மில்லியன் பார்வைகள் பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

பாலிவுட் பிரபலங்கள், ஷாரூக் கான், வருண் தவான், கரண் ஜோஹர், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலரும் ட்ரெய்லரை பார்த்து ‘பிகில்’ படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

‘பிகில்’ படத்தின்  தணிக்கை செய்யும் பணிகள் முடிந்த நிலையில் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

‘பிகில்’ படத்தை மிகப்பெரிய அளவில் சீனாவில் வெளியிட ஏஜிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.