‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ மூலமாக அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும், இறுதிச்சுற்று என பல படங்கள் மூலம் தன்னை வெற்றிப்பட தயாரிப்பாளராகஅடையளப்படித்திக்கொண்டவர் சீ.வி.குமார். தமிழ்ச்சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தையே கொண்டுவந்தவர்.
இயக்குனராக ஆசைப்பட்டு சந்தீப் கிஷன் நடிப்பில் ‘மாயவன்’ என்ற படத்தை இயக்கி கையைச் சுட்டுக்கொண்டவர் சீ.வி.குமார். அடுத்து படமே இயக்கப் போவதில்லை என்றிருந்தவருக்கு இப்போது மீண்டும் இயக்குனராகும் ஆசை வந்துள்ளது. தன்னுடைய திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகும் “கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்” எனும் புதிய படத்தை இயக்குகிறார். இதில் வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், அசோக் குமார், பகவதி பெருமாள், இயக்குனர் ராமதாஸ், பிரயங்கா ருத் (கதாநாயகி) ஆகியோர் நடிக்கின்றனர்.
சென்னையில் துவங்கிய “கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்” படத்தின் படப்பிடிப்பு தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது.