சமீப காலமாக தமிழ் சினிமாவில் வித்தியாசமான பட தலைப்புகள் வந்தவண்ணம் உள்ளது அந்த வரிசையில் முற்றிலும் மாறுபட்ட தலைப்புடன் ஒரு திரில்லர் படம் உருவாகி வருகிறது. அது எஸ்.எஸ்.வி எண்டர்பிரைசஸ் எஸ்.ஆறுமுகம் தயாரிக்கும் “ ரெடி டு சூட் “ .இந்த படத்தின் பூஜை சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. மனோஜ்குமார் இதயராஜ் இயக்கவுள்ளார்.
நேரம், பிரேமம், வெற்றிவேல், போன்ற படங்களில் நடித்த ஆனந்த் நாக் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஜீவிதா நடிக்கவுள்ளார்.வில்லனாக மனோஜ் கே.பாரதிராஜா நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்.
முழுக்க முழுக்க திரில்லராக உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.