மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்

மக்களவை முன்னாள் சபாநாயகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான  சோம்நாத் சாட்டர்ஜி  உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு  வயது89. கடந்த 40 நாட்களாக வயது மூப்பு மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக கொல்கத்தாவில் உள்ள பெல்லி வேவ் கிளினிகில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சையளித்து வந்த நிலையில் இன்று காலை மரணமடைந்தார்.

சோம்நாத் சாட்டர்ஜி  2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராக கட்சி வேறுபாடின்றி செயல்பட்டு உறுப்பினர்களின் அன்பையும், பாராட்டையும் பெற்றவர்.  அவர், 10 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அவரின் மறைவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பல தலைவர்களும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.