விஜயதாரணி பாஜகவில் இணைகிறார்!?

கடந்த சில தினங்களாகவே காங். சட்டமன்ற கொறடாவும், எம்.எல்.ஏ.வுமான விஜயதரணி, பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன. அதனை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த வாரம் முழுவதும் அவர், தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கேவில்லை. தொடர்ந்து, டெல்லியில் முகாமிட்டிருக்கும் அவர், இன்று ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.