வெள்ளதால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு 20லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்

வெள்ளதால் பாதிக்கப்பட்ட கேரளா மக்களுக்கு 20லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை கொடி அசைத்து அனுப்பிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கேரளா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பெரும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதியுற்று வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நாடு முழுவதிலும் இருந்து நிவாரண உதவியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்ட ரோட்டரி சங்கங்கள் சார்பாக வெள்ளதால் பாதிக்கப்பட்ட கேரளா பகுதி மக்களுக்கு 20 லட்சம் மதிப்பிலான உணவு¸ மருந்து¸ போர்வை¸ உடை உள்ளிட்ட நிவாரண பொருட்களை உதவியாக லாரி மூலம் அனுப்ப வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் முன்னின்று கொடி அசைத்து அனுப்பி வைத்தார்