சாலை பாதுகாப்பு குறும்பட பாடல் வெளியிட்ட மதுரை மாநகர காவல் ஆணையர்

மதுரை மாநகர காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு தொடர்பானஎச்சரிக்கை கீதம்என்னும் தலைப்பில் போக்குவரத்து விழிப்புணர்வு குறும்படம் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் .கா. அவர்கள் 15.08.2018-ம் தேதியன்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்களாகிய அனைவரும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், மதுரை மாநகரை விபத்தில்லா மாநகராக மாற்ற காவல் துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொண்டார். மேலும் இந்த குறும்பட பாடலை இயக்கிய காமராஜர் பல்கலைகழகத்தை சேர்ந்த முனைவர். திரு.செந்திலிங்கம் மற்றும் அவரது குழுவினர்களையும் காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்.