நடிகர் அருண்பாண்டியன் அவரது மகள் கீர்த்தியுடன் நடித்து, தயாரித்துள்ள படம், அன்பிற்கினியாள்.
இயக்குநர் கோகுல் இயக்கி இருக்கும் அன்பிற்கினியாள் வரும் மார்ச் மாதம் 5-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இதுகுறித்து நடிகர் அருண்பாண்டியன் பேசியதாவது…
‘அன்பிற்கினியாள் படம் எல்லோருக்கும் பிடிக்கும் என உறுதியாக நம்புகிறேன். இந்தப்படத்தை நாங்கள் சீக்கிரமாகவே முடித்துவிட்டோம். ‘கொரோனா’ காரணமாக ரிலீஸ் பண்ண தாமதமாகிவிட்டது..
நான் 18 ஆண்டுகளுக்குப் பின் இந்தப்படத்தில் நடித்துள்ளேன். என் மகளோடு நடித்தது நல்ல அனுபவம். எனக்குள் ஒரு நடிகன் இருக்கிறான் என்ற நம்பிக்கையை இந்தப்படம் ஏற்படுத்தியுள்ளது.
இந்தப்படத்திற்கு உயிர் கொடுத்தவர் மியூசிக் டைரக்டர் ஜாவித். மிக சிறப்பாக உழைத்துள்ளார். இந்தப்படத்தில் வாழ்ந்தது போன்ற ஓர் உணர்வு. இந்தப்படத்தின் கேரக்டர் போல கிடைத்தால் தொடர்ந்து நிச்சயமாக நடிப்பேன்.
ஒரு நல்லபடத்தை எடுத்துள்ளோம். படத்திற்கு மக்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்
இயக்குநர் கோகுல் பேசியதாவது,
அன்பிற்கினியாள் எனக்கு ஒரு புது ஜானராக இருக்கும் என நினைத்து செய்தேன். அருண்பாண்டியன் சார் இந்தப்படத்தின் மலையாள வெர்சனை காண்பித்து டயலாக் எழுதச் சொன்னார்.
படம் பார்த்து முடித்ததும் எனக்கு பிடித்துப்போனதால் .நான் அருண்பாண்டியன் சாரிடம் படத்தை நானே செய்கிறேன் என்று வாய்ப்பைக் கேட்டுப் பெற்றுக் கொண்டேன்.
கீர்த்தி பாண்டியன் இந்தப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரின் நடிப்பு இந்தப்படத்தைத் தூக்கிப்பிடித்திருக்கிறது. எங்களுக்கு இந்தப்படம் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. ஸ்பாட்டிலே அவர் நிறையமுறை கைத்தட்டல் வாங்கினார்.
அருண்பாண்டியன் சார் மிக சிறப்பான உழைப்பைக் கொடுத்து நடித்தார். ஜாவித் நான் வேலை செய்த இசை அமைப்பாளர்களிலே ஒன் ஆப் த பெஸ்ட் இசை அமைப்பாளர். இந்தப்படத்தில் பின்னணி இசை மற்றும் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. எல்லாப்பாடல்களையும் லலித் ஆனந்த் நன்றாக எழுதியிருக்கிறார்
மீடியா எப்போதும் நல்லபடங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தவறியதே இல்லை. இந்தப்படத்தையும் மக்களிடம் மீடியா சரியாக கொண்டு சேர்க்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி ” என்றார்