‘காந்தி உலக அறக்கட்டளை’யுடன் இணைந்த நடிகர் ரமேஷ் கண்ணா!

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சகல ஜீவராசிகளும் வாழத்தகுதியான இந்த பூமி, சில ஆண்டுகளாக வழத்தகுதியற்றதாக மாறிவருகிறது. இதனை அறிந்த இயற்கை ஆர்வலர்கள் அதனை எப்படியாவது சரிசெய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள்.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கழிவுகள், ரசாயன திரவம், கதிரியக்க கசிவுகள்,  பிளாஷ்டிக், பாலித்தீன் என பல வகையான பாதிப்புகளிலிருந்து பூமியை மீட்க போராடி வரும் இயக்கங்களில் ஒன்றான ‘காந்தி உலக அறக்கட்டளை’ அமைப்பு சிறப்பாக அதிலும் ‘கும்மிடிபூண்டி’யின் இயற்கையை மீட்டெடுக்க முழுமுனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே 25 மரக்கன்றுகளை, ‘காந்தி உலக அறக்கட்டளை’ அமைப்பின் சார்பில் இயக்குனரும், நடிகரும் ஆன ரமேஷ் கண்ணாவும் நட்டு வைத்தார்.