மீண்டும் ஒரு கதைத் திருட்டு புகார்!

தமிழ்த்திரையுலகில் பிரபலமான இயக்குனர், பிரபலமாகத இயக்குனர் என பாகுபாடின்றி கதையையும், படத்தலைப்பினையும் திருடுவது தமிழ்சினிமாவில் சர்வ சாதரணமாகியிருக்கிறது.

இதை உறுதி செய்வது போல் மீண்டும் கதைத்திருட்டு புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இயக்குனர் கூறுவதாவது…

‘கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசனை வைத்து நான் எழுதி இயக்கி ஜி மீடியா  கலை சினிமாஸ்வுடன் இணைந்து தயாரித்த தாதா 87 படத்திற்கு தாங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி.

தற்சமயம் பவுடர் ,பப்ஜி படங்களை இயக்கி வருகிறேன். இன்று காலை YouTube ல் நடிகர் சாய்குமார் நடிப்பில் ‘ஒன் பை டூ’ என்ற பெயரில் நான் தயாரித்து இயக்கிய ‘தாதா – 87’ படத்தினை  ரீமேக் செய்யப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் .

ரஜினியின் ‘காலா’ டீசருடன் ‘தாதா- 87’ படத்தின் டீசர் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது, அனைத்து சினிமா ரசிகர்களும் அறிவார்கள்.

‘தாதா- 87’  டீசரில் சாருஹாசன் நடித்திருந்த காட்சிக்கு பதில் சாய்குமார் நடித்த சில காட்சிகள் மட்டும் படமெடுத்து இன்று டீஸராக ளியிட்டுள்ளார்கள். இதனை பார்த்து மிகுந்த மன உளைச்சல் அடைந்தேன்.

‘ஒன் பை டூ’ படக்குழு  என்னுடைய   கற்பனையும், என் உழைப்பையும் திருடியுள்ள சம்பவம் நடந்துள்ளது. என்னிடம் முறையாக எந்தவிதமான அனுமதியும் பெறாமல் செய்திருப்பதும், சாய்குமார் போன்ற மிகப்பெரிய நடிகர் துணையுடன் நடந்து இருப்பதும் வருந்தத்தக்கது.

முறையாக அனுமதி பெற்று என் கதையின் கருவை, என் பெயரை பயன்படுத்தாமல் வேறு ஒருவர் சொந்தம் கொண்டாடுவது ஒருவருடைய பெயருக்கு முன் உள்ள ‘இனிஷியல் ஐ’ மாற்றுவதற்கு சமமானது.என பெரியவர்கள் கூறுவார்கள். தற்போது இதுபோல் பல படங்களுக்கு தொடர்ந்து கதை  திருட்டு நடைபெற்று வருகிறது .

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் படமாக ‘தாதா- 87’ படத்தின் கருவை சிதைத்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ‘ ஜு மீடியா’ கம்பெனி வழக்கறிஞர்கள் அறிவுறுத்தலின் படி நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம். இதை பற்றிய விரிவான செய்திகளை விரைவில் அறிவிப்பேன்.   என்கிறார், பாதிக்கப்பட்ட தயாரிப்பாளரும், இயக்குனருமான விஜய் ஸ்ரீ ஜி.